ஹலோ பாட்டியம்மா..!

நான்தான் பாட்டியம்மாவோட "புகைப்பட ஆல்பம்' பேசறேன். பாட்டியம்மா 7 வயசு சிறுமியா இருக்கும் போதிலிருந்து இந்த புகைப்படங்களை
ஹலோ பாட்டியம்மா..!

நான்தான் பாட்டியம்மாவோட "புகைப்பட ஆல்பம்' பேசறேன். பாட்டியம்மா 7 வயசு சிறுமியா இருக்கும் போதிலிருந்து இந்த புகைப்படங்களை சேகரிச்சு ஆல்பம் பண்ண ஆரம்பிச்சாங்க. இதில், உலகத் தலைவர்கள்,  அறிஞர்கள், கவிஞர்கள், முக்கிய சம்பவங்கள், திருவிழாக்கள் என ஒரு நூற்றாண்டின் சாராம்சமே இந்த ஆல்பத்தில் அடங்கியிருக்கிறது.  இந்த வாரம் பேரன்-பேத்தியோட போட்டோவை ஒட்டி வைச்சதும் மொத்த போட்டோக்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிடுச்சு.  என்னை யார் எடுத்துப் பார்த்தாலும் எனக்கு சந்தோஷமா இருக்கும். 
காரணம்... ஒவ்வொரு போட்டோவுக்குப் பின்னாலயும் ஒரு கதை இருக்கும். அந்தக் கதைகளை பாட்டியம்மா எத்தனை முறை சொன்னாலும் கேட்க இனிமையாக இருக்கும். பேசும் படம் என்று சொல்வார்களே அதுபோல சில படங்கள் உங்களுடன் பேசும். அதுபோன்ற புகைப்படங்கள் பற்றி விளக்கம் எதுவுமே சொல்லத் தேவையிருக்காது. 
உதாரணமாக, குடிசை வீட்டில் உள்ளஅடுப்பில் பூனை தூங்கும் படத்தைப் பார்த்தால் அந்த வீட்டில் அடுப்பு எரிந்து ரொம்ப நாளாகிறது. அந்த அளவுக்கு வறுமை என்பது புரியும். 
முதல் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் புகைப்படங்கள் மூலம்தானே தெரியவந்தது!   
புகைப்படங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களைப் பதிவு செய்கின்றன. குரூப் போட்டோ எவ்வளவு சிறப்பான பதிவு..! ஒரு மாணவன் விஞ்ஞானியாகவோ, நீதிபதியாகவோ, குடியரசுத் தலைவராகவோ புகழ் பெறும்போது,  குரூப் போட்டோவில் இருக்கும் மற்ற மாணவர்கள் அனைவருமே பெருமையடைவார்கள்.  சிறிய வயதில் எடுத்த புகைப்படங்களை பெரியவர்களான பின் பார்க்கும்போது, சுவாரசியமான பழைய நினைவுகள் தோன்றி மறையும்.  
புகைப்படங்கள் மூலம்தான் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பதிவை இன்று நாம் காண முடிகிறது. 
சார்லி சாப்ளின், தன் வாழ்க்கை வரலாற்றை எழுத்தால் எழுதாமல், இளமை முதல் முதுமை வரை வெறும் புகைப் படங்களாகவே தொகுத்துத் தந்தார் என்றால் புகைப்படங்களின் பெருமையைப் பற்றி வேறு என்ன சொல்வது..?
இந்தக் காலத்தில் பெரும்பாலும் சி.டி. பதிவுதான். ஆனால்,  போட்டோ ஒட்டி, கையால் புரட்டிப் பார்க்கும் ஆல்பமாக இருப்பதில் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கிறது என்பதை என்னைப்போல் "ஓர் ஆல்பமாக' இருந்து பார்த்தால்தான் உங்களுக்குப் புரியும்...! பாட்டியம்மாவின் ஆல்பத்திலிருந்து சில படங்களை உங்களுக்குத் தருகிறேன்....! 
-ரவி வர்மன்
(ஆகஸ்ட்- 19-ஆம் தேதி உலக புகைப்பட தினம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com