அங்கிள் ஆன்டெனா

நீர் நாய்களுக்கும் நாம் செல்லமாக வளர்க்கும் வீட்டு நாய்களுக்கும் எந்தவிதமான பூர்வஜென்ம உறவும் கிடையாது. 
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
நீர் நாய்கள் எங்கு அதிகம் காணப்படுகின்றன? இவை என்ன இனத்தைச் சேர்ந்தவை? 
பதில்: 
நீர் நாய்களுக்கும் நாம் செல்லமாக வளர்க்கும் வீட்டு நாய்களுக்கும் எந்தவிதமான பூர்வஜென்ம உறவும் கிடையாது. 
"மஸ்ட்டெலிடே' என்ற இனத்தைச் சேர்ந்தது நீர் நாய். நமது தென் மாநிலங்களில் காணப்படும் நீர் நாய் "ஸ்மூத்' என்ற வெரைட்டிக்கு உட்பட்டதாகும்.
காஷ்மீரிலும் நீர் நாய்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை காமன் டைப் வகையைச் சேர்ந்தவை.
நீலகிரி மற்றும் கூர்க் மலைப் பகுதிகளில் மற்றொரு ரகம் காணப்படுகின்றது.
மீன்தான் நீர் நாய்களின் முக்கிய உணவு. மீன் பிடிப்பதற்கு வாகாக, வேகமாக நீந்துவதற்காக இதன் உடல் சிலிண்டர் போல நீள் உருளை வடிவத்தில் இருக்கின்றது. நீந்துவதற்கு வாகாக விரலிடுக்குகளில் சவ்வு இணைப்பு, வாட்டர் ப்ரூஃப் தோல், வெகு அடர்த்தியான மெல்லிய ரோமம் உடலில் இருக்கிறது. இதற்கு அடியில் திருப்பூர் பனியன் போன்ற குட்டை முடிகளைக் கொண்ட அமைப்பும் உள்ளது.
நீர் நாய் நனைந்த நிலையில் ஆரணி பட்டு போல பளபளப்பாக இருக்கும். காதுகளிலும் மூக்குத் துவாரங்களிலும் ஸ்பெஷல் வால்வுகள் இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் தண்ணீர் அவற்றுக்குள் நுழையாது.
இத்தனை டெக்னிக்கல் சமாசாரங்களை வைத்துக் கொண்டிருக்கும் நீர் நாய்கள் கூட்டம் கூட்டமாக நீரில் நீந்தி மீன் பிடிக்கும் அழகு காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அடுத்த வாரக் கேள்வி
பறக்கும் ஓணான் இருக்கிறதாமே? இறக்கை இல்லாமலேயே பறக்குமாமே? இது எங்கு காணப்படுகிறது?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com