இனி பொய் சொல்ல மாட்டேன்

ஒரு பள்ளியில் ராமன், முருகன் என்ற இரண்டு மாணவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். ராமன் பணக்காரப் பையன். சோம்பேறி பொய் சொல்லத் தயங்காதவன். முருகன் அப்படி அல்ல. மிகவும் நல்ல பையன்.
இனி பொய் சொல்ல மாட்டேன்

ஒரு பள்ளியில் ராமன், முருகன் என்ற இரண்டு மாணவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். ராமன் பணக்காரப் பையன். சோம்பேறி பொய் சொல்லத் தயங்காதவன். முருகன் அப்படி அல்ல. மிகவும் நல்ல பையன்.
 ஒருநாள் ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியே சென்றிருந்தபோது ராமன் சுவரில் மாட்டப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியை எடுக்க, அது கீழே விழுந்து உடைந்தது. உடனே எல்லாரும் பயந்து ஓடித் தங்கள் இடங்களில் உட்கார்ந்து படிப்பதுபோல பாவனை செய்தார்கள்.
 ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். நிலைக்கண்ணாடி உடைந்து கிடப்பதைக் கண்டு, இதைச் செய்த பையன் எழுந்து நிற்கட்டும் என்றார். ஆனாலும் ஒருவனும் எழுந்து நிற்கவில்லை.
 ஆசிரியர் வரிசையாக விசாரித்தார். எல்லாப் பையன்களும் நான் இல்லை நான் இல்லை என்று சொன்னார்கள். கடைசியில் ராமனின் முறை வந்தது. தான் உடைத்ததை ஒப்புக்கொள்வான் என்று எல்லா மாணவர்களும் நினைத்தார்கள். ஆனால் ராமன் இல்லை என்று சொன்னான்.
 இதைக் கண்ட முருகன் கண்ணாடியை ராமன் உடைத்தான் என்பதை ஆசிரியர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார். அவனுக்கு ஏதாவது தண்டனை கிடைக்கும் என்பதால் அவனைக் காப்பாற்ற நினைத்தான். ஆகவே தன் முறை வந்ததும் நான்தான் உடைத்தேன் என்று சொன்னான். அவனை பெஞ்சின் மேல் ஏறும்படி சொன்னார் ஆசிரியர். தைரியமாக அதை ஏற்றுக் கொண்ட முருகன் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டான்.
 பள்ளி விட்டதும் ராமன் முருகனைப் பார்த்து அழுதான். "நீ எனக்காக இப்படி அவமானப் பட்டதை ஒருநாளும் மறக்க மாட்டேன். நான் இனி நல்லவனாக இருக்கப் போகிறேன் இனி பொய் சொல்ல மாட்டேன்'' என்றான்.
 (நல்லி குப்புசாமி செட்டியார் எழுதிய வழிகாட்டும் கதைகள் நூலிலிருந்து.)
 -மயிலை மாதவன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com