தகவல்கள் 3

"திருமணம், விழாக்களில் தேங்காய் தருகிறார்களே, அது ஏன்?'' என வாரியாரிடம் ஒருவர் கேட்டார்.
தகவல்கள் 3

தேங்காய்
"திருமணம், விழாக்களில் தேங்காய் தருகிறார்களே, அது ஏன்?'' என வாரியாரிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு வாரியார் ""தேங்குதல் என்றால் தங்குதல் என்று பொருள். தேங்காய் என்றால் தங்கியிராதே வாங்கிக் கொண்டு கிளம்பு'' என்று அர்த்தம். அதனால்தான் நிகழ்ச்சிகள் முடிந்ததும் தேங்காய் தருகிறார்கள்'' என்றார் நகைச்சுவையாக.
உ. இராஜமாணிக்கம், கடலூர்.

மேஜிக் ஒரு பித்தலாட்டம்
ரவீந்திரநாத் தாகூரை ஒரு பள்ளிக்கூடத்தில் பேச அழைத்திருந்தனர். தாகூர் சிறப்புரையாற்றுவதற்கு முன்பு பள்ளி தாளாளர் தாகூர் பேசுவதற்கு முன் மேஜிக் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிப்பு செய்தார். தாகூர் தாளாளரை அழைத்து இல்லாததை இருப்பது போலவும், இருப்பதை இல்லாதது போலவும் காட்டும் "பொய் புரட்டை' மேஜிக் எனும் பெயரில் பிள்ளைகள் முன்னால் நிகழ்த்தும் முட்டாள் நிகழ்ச்சி. இம் மேடையில் இப்போது நடைபெற்றால் நான் பேச மாட்டேன். போய் விடுவேன் என்று சொல்ல தாளாளர் மேஜிக் நிகழ்ச்சியை உடனடியாக கேன்சல் செய்தாராம். திருடன் கண் மறைவில் குற்றம் புரிகிறான். மேஜிக்காரனோ கண் முன்னாலேயே குற்றம் செய்கிறான். ரெண்டும் குற்றம்தான். இக்குற்றத்தை "கலை' என்பது தவறான செயல் என்கிற கருத்தை தாகூர் இறுதி மூச்சு இருக்கும்வரை மாற்றிக் கொள்ளவே இல்லை.
ஜோ. ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை.

பெருந்தன்மை
மூதறிஞர் இராஜாஜி முதல்வராக இருந்த நேரம், அவர் ஒருமுறை நாகர்கோவில் சென்றிருந்தார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அப்போது நாகர்கோவிலில் வசித்துக் கொண்டிருந்தார். அவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்.
கவிமணியைப் பார்க்க இராஜாஜி விரும்பினார். அவரைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளிடம் கூறினார். "நீங்கள் ஏன் அவ்வளவு தூரம் செல்ல வேண்டும். நான் போய் அவரை இங்கேயே அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்'' என்றார் அந்த அதிகாரி.
அவர் தமிழின் சிறந்த கவிஞர் எனது அருமை நண்பர். அவரை அவர் இல்லத்திற்குச் சென்று பார்ப்பதே நல்ல முறை என்றார் இராஜாஜி!
ஆர். அஜிதா, கம்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com