வெள்ளை யானையும் வெள்ளை மனசும்

ஒரு காட்டில் வெள்ளை யானையும் அதன் குட்டி யானையும் வசித்து வந்தன. தாய் யானைக்கு கண் பார்வை இல்லை. குட்டி யானை தன் தாய்க்குத் தேவையான உணவுகளைச் சேகரித்து வந்து கொடுக்கும்
வெள்ளை யானையும் வெள்ளை மனசும்

ஒரு காட்டில் வெள்ளை யானையும் அதன் குட்டி யானையும் வசித்து வந்தன. தாய் யானைக்கு கண் பார்வை இல்லை. குட்டி யானை தன் தாய்க்குத் தேவையான உணவுகளைச் சேகரித்து வந்து கொடுக்கும். சிலநேரம் குட்டி யானை வெளியில் சென்றிருந்தால் மற்ற யானைகள் வந்து கண் தெரியாத யானையின் உணவுகளைத் தின்று சென்று விடும். அதனால் குட்டி யானை தன் தாயை அழைத்துக்கொண்டு தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்குச் சென்று தனியாக வசித்து வந்தன. சந்தோஷமாகவே இரண்டு யானைகளும் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தன.
ஒரு நாள் குட்டி யானை உணவு சேகரிக்கச் சென்றபோது காட்டில் ஒரு மனிதன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவனிடம் அழுகைக்கான காரணத்தைக் கேட்டது. தான் இந்த காட்டுக்கு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டதாகவும், ஊருக்குத் திரும்ப வழி தெரியவில்லையென்று அழுதான். வெள்ளைக் குட்டி யானைக்கு இரக்கம் சுரந்தது . "அழாதே நான் உன்னை இந்த காட்டிலிருந்து உனது எல்கைவரை எனது முதுகில் ஏற்றிச் சுமந்து கொண்டு போய்விட்டு விடுகிறேன். அதற்கு முன்னால் கண் தெரியாத என் தாய்க்கு இந்த இரைகளைக் கொடுத்துவிட்டு அனுமதி வாங்கி வருகிறேன்'' என்று சென்றது - தாயிடம் விவரத்தைச் சொல்லியது, தாய் யானை "மகனே மனிதர்கள் ரொம்பவும் தந்திரசாலிகள் நம்மை ஏமாற்றி அழைத்துச் சென்று யாரிடமாவது விற்று விடுவார்கள்'' என்று சொன்னது. தாய் சொல்லை காதில் வாங்கிக் கொள்ளாமல் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த மனிதனை தனது முதுகில் சுமந்து சென்று அவனது ஊரின் எல்லை வரை விட்டு வந்தது.
சில மாதங்கள் சென்ற பின் அந்நாட்டின் அரசன் அறிவிப்பொன்றை வெளியிட்டான். அரண்மனையில் தான் ஆசையாக வளர்த்து வந்த யானை இறந்து விட்டதாகவும் அதேபோன்று ஒரு வெள்ளை யானையைக் கொண்டு வருபவர்களுக்குத் தகுந்த வெகுமதி கொடுக்கப்படும் என்று அறிவித்தான். யானையால் உதவி பெற்ற மனிதன் அரண்மனைக்கு வந்து தனக்கு வெள்ளை யானை இருக்குமிடம் தெரியும் என்றும் உதவிக்கு சேவகர்களை அனுப்பினால் அது வசிக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் சொன்னான்.
குட்டி யானையைப் பிடித்து வந்து மன்னரிடம் ஒப்படைத்தார்கள். இப்போது அதை குட்டி யானை என்று சொல்ல முடியாது. சராசரி யானையாக இருந்தது யானை இருக்குமிடத்தை காட்டியவனுக்குத் தகுந்த வெகுமதியை மன்னர் கொடுத்து அனுப்பினார்.
சில நாட்கள் சென்ற பின்பு சேவகர்களும் யானையைப் பராமரிப்பவனும் வந்து மன்னரிடம் சொன்னார்கள் அந்த யானை உணவு உட்கொள்ளாமல் சதா கண்ணீர் வடிப்பதாகவும் உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையிலிருப்பதாகவும் சொன்னார்கள்.
மன்னன் அவசரமாக யானையிடம் வந்து அதோடு பேசினான். நீ இந்த அரண்மனையில் இருப்பது உனக்குப் பெருமை சேர்க்கும். உனக்கு எந்தக் குறைவும் இருக்காது. சத்தான ஆகாரங்கள் அன்பான பணியாளர்கள் எல்லாம் உனக்குக் கிடைக்கும் என்றான்.
யானை அதெல்லாம் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தேவை கண் தெரியாத எனது தாய்தான். பாவம் என் தாய் பட்டினியாக இருப்பாள். தயவுசெய்து என் தாயிடம் என்னைச் சேர்த்து விடுங்கள் என்று விளக்கியது. மன்னன் மனதுருகி கண்ணீர் விட்டான். சேவகர்களை அழைத்து இந்த வெள்ளை யானையை அதன் இருப்பிடத்தில் விட்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். தாயைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தது.
தாய் சொன்னது ""நான் சொன்னது சரிதானே மனிதர்கள் பொல்லாதவர்கள் தந்திரசாலிகள்''.
அதன் மகளான வெள்ளை யானை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதர்கள் நல்லவர்கள், கருணை நிறைந்தவர்கள், மன்னன் காட்டிய கருணையால்தான் நான் மீண்டும் உன்னிடம் வர முடிந்தது என்று சொல்லியது, தாய் யானை புரிந்துகொண்டு தன் தலையை ஆட்டி ஆமோதித்தது.
மூலம்: பஏஉ ரஏஐபஉ உகஉடஏஅசப ஆங்கிலத்தில் வெளியான ஆண்டு 1968.

-ஆழ்வாநேரி சாலமன்















 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com