கடி

"என்னது?...,நல்ல காலமா?...விசித்திரமான பேரா இருக்கே!''"ஒரு நாள் குடுகுடுப்பைக்காரன், "நல்ல காலம் பொறக்குது,.
கடி

* "உன் பேர் என்ன?''
"...நல்ல காலம்!...''
"என்னது?...,நல்ல காலமா?...விசித்திரமான பேரா இருக்கே!''
"ஒரு நாள் குடுகுடுப்பைக்காரன், "நல்ல காலம் பொறக்குது,....நல்ல காலம் பொறக்குது' ன்னு சொன்னப்போ நான் பொறந்தேனாம்!''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

* "..."பூக்கடையில் பூவெல்லாம் தீர்ந்தி
டுச்சு!'..... இதை ஆங்கிலத்தில் சொல்லு!''
"காலி ஃப்ளவர் டீச்சர்''
வி.லலித் ஆதித்யா, சென்னை. 

* "பாலு,....எங்கே "வாஸ்து' ன்னு சொல்லு!...''
"வாத்ஸு!'
"சரி,....வராதா!..... "கத்தரிக்காய் கொத்ஸý' ன்னு சொல்லு பார்ப்போம்!''
"கத்தரிக்காய் கொஸ்து!''
ஆர்.யோகமித்ரா, எஃப்-2, 
கிருஷ்ணா அபார்ட்மென்ட், பிளாட் 20, சுந்தர் அவென்யூ, மகாசக்தி காலனி, 
செம்பாக்கம், சென்னை - 600073.

* "பக்கத்து வீட்டு பாகவதர் பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்....வரியா போலாமா?''
" நீ போ!.....கேட்டுக்கிட்டே இரு!''
"நீ?''
""நான் வாசல் " கேட்'டுக்கிட்டே இருக்கேன்''
ஜி.ரவிக்குமார், 
35/8, தஸ்தகிரி சாகிப் தெரு, 
சத்துவாச்சாரி, வேலூர் - 632009.

* "காலைக் கடனையெல்லாம் முடிச்சாச்சா?''
"நான் யார் கிட்டேயும் காலையிலே கடனே வாங்கலியே!''
".... !!!....''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

* "அந்த அங்கிள் தினமும் ஜோசியம் பார்ப்பாரு!'
"ஜோசியத்திலே அவ்வளவு நம்பிக்கையா?''
"இல்லே.... தொழிலே அதான்.''
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com