அங்கிள் ஆன்டெனா

தலையைப் பிய்த்துக் கொள்ளும் சிறுவர்மணிகளுக்கு முதலில் "அரிபாடா' என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன்,
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
அரிபாடா அதிசயம் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைப் பற்றிச் சொல்லுங்களேன்... 
பதில்: 
தலையைப் பிய்த்துக் கொள்ளும் சிறுவர்மணிகளுக்கு முதலில் "அரிபாடா' என்றால் என்ன என்று கூறிவிடுகிறேன், அப்புறம் அதிசயத்துக்குப் போகலாம். அரிபாடா என்பது ஸ்பானிஷ் சொல். இதற்கு அர்த்தம்... கூட்டம் கூட்டமான வருகை.
இப்போது அதிசயம்:
ஒரிசா மாநிலத்திலுள்ள கடலோரப் பகுதியான "கரிமாத்தா' என்னுமிடத்தில், ஆண்டுதோறும் நடக்கும் இயற்கைக் கண்காட்சிதான் அந்த அதிசயம். இக் கடற்கரையில் "ஆலிவ் ரிட்லி' என்ற சிறிய வகை ஆமைகள் கூட்டம் கூட்டமாக (லட்சக்கணக்கில்) வந்து முட்டை இடுகின்றன. கடற்கரை மணலில் துளை பறித்து முட்டை களைப் போட்டுவிட்டு, துளைகளை மூடிவிட்டு, கடலுக்குள் மீண்டும் சென்று விடுகின்றன. இந்தக் காட்சி 2 மணி நேரத்தில் நடந்து முடிந்துவிடுவது மற்றொரு ஆச்சரியம்.
இதில் ஒரு ஆமை, ஒருமுறைக்கு 50 முட்டைகள் இடுமாம். அடேங்கப்பா... கணக்குப் போட்டுப் பாருங்கள் ஒரு லட்சம் ஆமைகள் முட்டை போட்டால் மொத்தம் எவ்வளவு முட்டைகள் என்று...
இந்த அதிசய நிகழ்வு, 12 கோடி ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறார்கள். இதுதான் சூப்பர் அதிசயம்! 
அடுத்த வாரக் கேள்வி
ஆடுகளை, வளர்ப்புப் பிராணிகளாக மனிதன் வளர்க்க ஆரம்பித்தது எப்போது, எப்படி என்று கூறுங்களேன்...
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com