ராய்ட்டர்

பத்திரிகைகளுக்கு செய்தி தருவதற்கென்றே ஏகப்பட்ட செய்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்தைச் சொல்லலாம். 
ராய்ட்டர்

பத்திரிகைகளுக்கு செய்தி தருவதற்கென்றே ஏகப்பட்ட செய்தி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது என்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்தைச் சொல்லலாம். 
கி.பி. 1850 ஆம் ஆண்டு பால் ஜூலியஸ் ராய்ட்டர் என்ற ஜெர்மனி நாட்டுக்காரர் இதை தொடங்கினார். தனது கல்லூரி படிப்பை முடித்ததும் ஒரு வங்கியில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்போது அந்த வங்கிக்கு பாரீஸ் நகரின் "ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' விவரங்கள் தேவைப்பட்டன. அதற்காக அக்ஸ்லா சாப் பெல்லரி என்ற செய்தி தொகுப்பு நிறுவனத்தை உருவாக்கினார். 
இதன் வளர்ச்சியில் புறாக்களுக்கு பெரும் பங்கு உண்டு. செய்திகளை விரைவாக கொண்டு வந்து சேர்த்ததில் புறாக்கள் சிறந்து விளங்கின. ராய்ட்டர் ஜெர்மனியில் இருந்து பாரீஸின் பிரஸ்ஸல் நகருக்கு செல்லும் ரயிலில் புறாக்களை அனுப்பி வைப்பார். அந்த ரெயில் இரவு முழுவதும் பயணித்து விடியற்காலையில் பிரஸ்ஸல் நகருக்கு சென்று சேர்ந்து விடும். அங்கு இருக்கும் ராய்ட்டரின் நண்பர் அங்குள்ள பங்கு மார்க்கெட் விவரம், விலை நிலவரம் போன்ற தகவல்களை எழுதி புறாக்களின் காலில் கட்டிப் பறக்க விடுவார். 
இதில் ஆச்சரியம் என்ன வென்றால் புறப்பட்ட ஏழு மணிநேரத்தில் இந்த புறாக்கள் ராய்ட்டரிடம் வந்து சேர்ந்துவிடும். இது அந்த ரயில் செல்லும் வேகத்தைவிட அதிகம்! இதே தொலைவைக் கடக்க ரெயில் ஒன்பது மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும்! மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பறந்து வந்த புறாக்கள் அந்த செய்தியை சேர்த்தன. இப்படி சுடச்சுட கிடைத்த பங்கு மார்க்கெட் நிலவரத்தை நல்ல விலைக்கு உடனே வியாபாரிகளுக்கு விற்றுவிடுவார் ராய்ட்டர்!
1851 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து பாரிசுக்கு கடலுக்கடியில் கேபிள் அமைத்து அதன் மூலம் தகவல் தொடர்பு ஏற்பட்டது. அப்போது லண்டனுக்கு வந்த ராய்ட்டர் தன் தொழிலை மேலும் விரிவடையச் செய்தார். நாளடைவில் பொதுவான செய்திகளையும் தொகுத்தளிக்கத் தொடங்கினார். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 
ஒருமுறை மாவீரன் நெப்போலியன் போர் பற்றி நாடாளுமன்றத்தில் பேச இருக்கும் செய்தியை முன் கூட்டியே ராய்ட்டர் வெளியிட்டார். இது மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராய்ட்டர் புகழின் உச்சிக்கு சென்றார். இதைத் தொடர்ந்து ஒரு புதுமையையும் செய்தார். அது நடந்த செய்திகளை நேரடியாக நிருபர்களை போர்முனைக்கே அனுப்பி அவர்கள் பார்த்தவற்றை செய்தியாக எழுதித் தரும்படி சொன்னார். 
இதற்கு முன்புவரை சம்பவ இடத்துக்க நிருபர்கள் சென்று நேரடியாக செய்தி சேகரிக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இது அக்காலத்தில் மிகப் பெரிய புரட்சி! இப்படி பல புரட்சிகளை செய்த ராய்ட்டர் நிறுவனம் இன்று 180 நாடுகளில் தனது கிளையைப் பரப்பி செய்திகளை சேகரித்து வருகிறது. 
தொகுப்பு: கோட்டாறு கோலப்பன். 
நாகர்கோவில். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com