அங்கிள் ஆன்டென்னா

வெளவால்கள் ஏன் தலை கீழாகத் தொங்க வேண்டும், என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது. அதைக் கேட்பதற்குமுன் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள்.
அங்கிள் ஆன்டென்னா

கேள்வி: 
வெளவால்களைப் போல, எப்போதும் தலை கீழாகத் தொங்குகின்ற உயிரினம்
உலகில் வேறு எதாவது இருக்கின்றதா?

பதில்: 
வெளவால்கள் ஏன் தலை கீழாகத் தொங்க வேண்டும், என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது. அதைக் கேட்பதற்குமுன் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார்கள். அதற்கும் ஒரு நல்ல பதில் இருக்கிறது. அதை அடுத்த வாரம் பார்ப்போம். மேலும் அங்கிளிடம் நீங்களும், உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். புத்திசாலித் தனமான அறிவுபூர்வமான கேள்விகளுக்கு, நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும். சரியா?
வெளவால்களைப் போல தலைகீழாகத் தொங்கும் உயிரினம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. இதன் பெயர் ஸ்லோத் (Sloth). இந்த ஸ்லோத், தென் அமெரிக்காவின் வெப்பமண்டலக் காடுகளில் வசிக்கிறது.
அங்கு இருப்பதிலேயே உயரமான மரங்களாகப் பார்த்துதான் இது வசிக்கும். எறும்புதின்னி என்ற விலங்கு தெரியுமல்லவா? அதற்கு இவர் தூரத்து உறவினர் என்றுகூடச் சொல்லலாம்.
உயர்ந்த மரக்கிளைகளில் எப்பொழுதும் - ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் - தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். இதன் கால்களில் குடையின் கைப்பிடி போல வளைந்து நீண்ட  விரல்கள் இருக்கின்றன. இந்த விரல்களைக் கொக்கி போல மரக்கிளையில் மாட்டிவிட்டு, யார் தொந்தரவுமில்லாமல், ஹாயாக தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும்.
இந்த ஸ்லோத் மரத்துக்கு மரம் தாவுவதைப் பார்க்க கண் கோடி வேண்டும்,  ஏனென்றால், அப்போதும் தேர்ந்த சர்க்கஸ் கலைஞர் போல, தலைகீழாகவே மரத்துக்கு மரம் தாவுவார்.
- ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
மனிதர்களையே கொல்லும் படு பயங்கர விஷத்தைப் பாம்புகளுக்கு மட்டும் இயற்கை ஏன் வழங்கியுள்ளது?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com