தகவல்கள் 3

ஹிட்லர் தம் போர் வீரர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வீரனிடம், "உன் அருகில் சோவியத் குண்டு விழுமாயின்
தகவல்கள் 3

இறுதி விருப்பம்!
ஹிட்லர் தம் போர் வீரர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு வீரனிடம், "உன் அருகில் சோவியத் குண்டு விழுமாயின் உன்னுடைய இறுதி விருப்பம் என்னவாக இருக்கும்?'' என்று கேட்டார்.
 "அச்சமயம் என் அருகில் தாங்களும் இருக்க வேண்டும் என்பதே எனது இறுதி விருப்பமாக இருக்கும்!'' என்றான் அந்த வீரன் தயக்கம் இல்லாமல்.
 அந்த வீரனின் துணிச்சலைக் கண்டு ஹிட்லர் புன்னகைத்தார்.
என்.நஜிமாபேகம், டி.ஆர்.பட்டினம்.

உழைப்புக்கேற்ற உணவு!
சபர்மதி ஆசிரமத்தில், காந்தியடிகளின் குடிசையில் அவருக்குச் சேவை செய்யும் 
மனுபென் காந்தி, காந்தியடிகள் குடிப்பதற்கு ஒரு சொம்பில் மாம்பழச் சாறு கொடுத்தார். காந்தி அந்தப் பெண்ணிடம், இது எத்தனை மாம்பழத்தின் சாறு?'' என்று கேட்டார். மனுபென் "இரண்டு' என்றார்.
 "இரண்டு மாம்பழங்களின் சாற்றை அருந்துவதற்கான உடல் உழைப்பு எதையும் நான் இன்று செய்யவில்லை! எனவே நான் இதை அருந்துவது சரி அல்ல! ஆசிரமத்தில் இருக்கும் அனாதைச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிடு!'' என்றார்!
அ.கருப்பையா, பொன்னமராவதி.

தாய் மொழி!
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன் மகளுக்கு மேனாட்டு முறைப்படி ஆங்கில மொழியில் கல்வியளிக்க வேண்டுமெனச் சகோதரி நிவேதிதாவிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு நிவேதிதா, "குழந்தைகளுக்குத் தாய்ப்பால் போன்றது தாய்மொழி! எனவே கல்வியின் தொடக்கம் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும். தாய்மொழியில் தேர்ச்சியடைந்தபின் ஆங்கிலம் கற்கலாம். குழந்தைப்பருவத்திலேயே தாய்மொழியை மாற்றுதல் நுண்ணறிவிற்குத் தடையாகும். அது சொந்த இயல்புகளை அழித்துவிடக் கூடும்! பிறரிடமுள்ள நல்லனவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்குரிய பருவம் வரும் வரையில் காத்திருக்க வேண்டும்' என விளக்கம் தந்தார்.
இரா.சாந்தகுமாரி, கோயம்புத்தூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com