முத்துக் கதை: கண்ணன் கருணை!

பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணன் மீது பக்தி கொண்டவர்கள். திரெளபதி, பீமன் ஆகிய இருவரும் தாங்கள்தான் கண்ணன் மீது அதிக பக்தி கொண்டவர்கள்
முத்துக் கதை: கண்ணன் கருணை!

பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கண்ணன் மீது பக்தி கொண்டவர்கள். திரெளபதி, பீமன் ஆகிய இருவரும் தாங்கள்தான் கண்ணன் மீது அதிக பக்தி கொண்டவர்கள் என்று எண்ணி கர்வம் கொண்டிருந்தனர்.
 கண்ணன் ஒரு நாள் அவர்கள் வசித்த காட்டிற்கு விஜயம் செய்தார். 
 கண்ணனைக் கண்டதும் பீமனும் திரெüபதியும் விழுந்து விழுந்து உபசரித்தனர்.
 "ஆற்றிற்குச் சென்று குளித்து வருகிறேன்''என்று புறப்பட்டார் கண்ணன். 
 "ஏன் ஆற்றிற்குப் போகிறீர்கள்?...,வெந்நீர் வைத்துத் தருகிறோம்...இங்கேயே குளித்து விடுங்கள்'' என்று வெந்நீர் போடத் தொடங்கினர்.
 "சரி...,நீங்கள் வெந்நீர் போட்டு முடிப்பதற்குள் நான் சற்றுக் காலாற நடந்துவிட்டு வருகிறேன்''என்று வெளியே புறப்பட்டுவிட்டார் கிருஷ்ணன்.
 "அடுக்கில் தண்ணீரை வைத்து விட்டு அடுப்பை எரித்தனர், தண்ணீர் சுடவில்லை! எவ்வளவு விறகை வைத்து எரித்தாலும்...,ம்ஹூம்....,வெந்நீர் சுட்டபாடில்லை!....பச்சைத் தண்ணீராகவே இருந்தது!
 வெளியில் உலாவச் சென்ற கண்ணன் திரும்ப வந்து விட்டார். 
 "வெந்நீர் தயாரா?'' கண்ணன் கேட்டார். 
 திரெüபதியும் பீமனும் தலையைச் சொரிந்தனர்.
 "என்ன சோதனையோ தெரியவில்லை...நீங்கள் போனதிலிருந்து இதுவரை அடுப்பெரித்து விட்டோம்....,தண்ணீர் சுட்டபாடில்லை...!''
 "தண்ணீரைக் கீழே ஊற்று!''என்றார் கண்ணன்.
 "தண்ணீரைக் கீழே ஊற்றினான் பீமன். அதிலிருந்து ஒரு தவளை குதித்தது! "கண்ணா காப்பாற்று!...கண்ணா காப்பாற்று!'' என்று கத்திக் கொண்டிருந்தது அந்தத் தவளை. 
 "எவ்வளவு பக்தி இருந்தால் கண்ணன் அதைக் காப்பாற்ற எண்ணியிருப்பார்! நம்மைவிட அந்தத் தவளை பக்தி மிகுந்தது என்பதில் என்ன சந்தேகம்? தங்களைவிட அதிகம் பக்தி உள்ளவர்கள்...,உள்ளவைகள் எங்கும் இருக்கின்றனர் என்று உணர்ந்த திரெüபதியும், பீமனும் தங்களது கர்வம் நீங்கினர். கண்ணனின் கருணை தவளையையும் காப்பாற்றியது! கர்வத்தையும் அடக்கியது! 
 கண்ணன் புன்னகைத்தார்!
தீபம் எஸ்.திருமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com