விடுகதைகள்

பல்லாயிரம் பேர் கட்டி முடித்த மண்டபம், ஒருவன் கைபட்டு இடிந்து விழுந்தது.. இது என்ன?
விடுகதைகள்

1.  கடிக்கத் தெரியாதவனுக்குப் பற்கள் அதிகம்....
2.  பறிக்கப் பறிக்கப் பெரிதாகிக் கொண்டே போகிறது... இது என்ன?
3.  பல்லாயிரம் பேர் கட்டி முடித்த மண்டபம், ஒருவன் கைபட்டு இடிந்து விழுந்தது.. இது என்ன?
4.  கூடவே வருபவனுக்குப் பேசத் தெரியாது.. இது என்ன?
5.  வீடு தேடி வருவார், வந்தவுடன் சேதி சொல்வார். யார் இவர்?
6.  தாளமில்லாத ஆட்டம், தாய்மார்கள் விரும்பாத ஆட்டம்...
7.  பூமியிலே பொன் மரப்பாச்சி, புதைத்து வச்சிருக்கு...
8.  விண்ணிலே பறந்தாலும் இந்தப் பறவை ஓய்வெடுப்பது பூமியில்தான்...?
9.  அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்...
விடைகள்:
1. சீப்பு
2. குழி
3. தேன்கூடு
4. நிழல்
5. தபால்காரர்
6. சூதாட்டம்
7. மஞ்சள்கிழங்கு
8. விமானம்
9. வளையல்
-ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com