அங்கிள் ஆன்டென்னா

எனினும் பன்றி இறைச்சி நம் நாட்டில் பாப்புலர் ஆகாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
அங்கிள் ஆன்டென்னா

கேள்வி:
பன்றி இறைச்சி சுவையாக இருக்குமா? நம் நாட்டில் பன்றி இறைச்சி ஏன் வெறுக்கப்படுகிறது?

பதில்:
உண்மையில் பன்றி இறைச்சி சுவையானதுதான். கூடவே விலையும் சற்றுக் குறைவு...
எனினும் பன்றி இறைச்சி நம் நாட்டில் பாப்புலர் ஆகாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
முதல் காரணம், பன்றிகள் அழுக்கான இடங்களில் மேய்வதால் ஏற்படும் அருவருப்புதான்.
இரண்டாவது காரணம் பலர் பன்றி இறைச்சி என்றாலே உவ்வே என்பது. இதனால்தான் இந்த வெறுப்பு!
பன்றிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் யார்க்ஷயர் வகை வெண்பன்றிகள் வெகு சுகாதாரமானவை. இவற்றின் இறைச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது. அங்கு அவர்களது தினசரி மெனுவில் பேக்கன், ஹேம், ஸாஸேஜ் போன்றவை நிச்சயம் இடம்பெறும். மேலும் அரை வேக்காட்டில் டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பன்றி இறைச்சி ஐட்டங்களும் அங்கு மிகவும் பிரபலம்.
ஒரு ரகசியம்... நம் நாட்டில் பலர் பன்றி இறைச்சியை ரகசியமாகச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
வவ்வால்கள் தலைகீழாகத் தொங்குவதற்கு ஏதேனும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com