கடி

"அழைப்பைக் கொடுக்க வரலாம்னு உனக்குப் ஃபோன் போட்டேன்...,'தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கத் தயாராக
கடி

• "உன்னோட கல்யாணத்துக்கு எனக்கு அழைப்பே தரலியே....ஏன்?''
"அழைப்பைக் கொடுக்க வரலாம்னு உனக்குப் ஃபோன் போட்டேன்...,'தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் எந்த அழைப்பையும் ஏற்கத் தயாராக இல்லை'ன்னு தகவல் வந்திச்சே!''
மு.நாகூர்,
3/60ஏ, புது கிழக்குத் தெரு,
கீழக்கரை, -623517.

• "செல்ஃபோனைக் கண்டுபிடிச்சது யாரு?''
"எங்கப்பாதான் சார்''
"என்னடா உளர்றே?''
"எங்கம்மா காணாமல் போக வைச்சதை எங்கப்பாதான் சார்....ஒரு கால் போட்டு....சமையல் அறையிலிருந்ததைக் கண்டுபிடிச்சார்!''
எஸ்.கே.சரவணன்,
மயிலாடுதுறை.

• "ஏண்டா தேதியைக் கிழிச்ச உடனே வாயிலே போட்டு மெல்லுறே?''
"..."டேட்ஸ்'...சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர்தான் சொன்னாருப்பா!''
எம்.ஏ.நிவேதா,
3/14 ஏ, அரவக்குறிச்சிப்பட்டி,
அசூர்-620015

• "அங்கிள்!.... உங்க பையன் கோபியை கொஞ்சம் சத்தம் போடாம படிக்கச் சொல்லுங்க...''
"அவன் படிக்கிறதுலே உனக்கென்னப்பா கஷ்டம்?''
"அவன் படிக்கிறதைக் கேட்டுட்டு எங்கப்பா, அம்மா என்னையும் படிக்கச் சொல்லித் துன்புறுத்தறாங்க அங்கிள்!''
வி.ரேவதி, தஞ்சாவூர்.

• "எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்னுதானே சொல்லுவாங்க...நீங்க ஏன் ரெண்டாயிரம் இருக்கும்னு சொல்றீங்க?''
"இப்பதான் ஆயிரத்துக்கு மதிப்பில்லையே...., அதான்
அப்படிச் சொன்னேன்!''
என்.ராஜாராம்,
ஒய்.ஒத்தக்கடை,
மதுரை-625107

• "நேரத்தைச் சேமிக்கணும்னா என்ன செய்யணும்?''
"கடிகாரத்தை உண்டியல்லே போடணும்''
சீ.பிரதீப்,
தருமபுரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com