சமயோசித புத்தி!

ஒருவன் விசிறி வியாபாரம் செய்து வந்தான். விசிறிகள் விற்பதற்காக அவன், "விசிறி!....விசிறி!...,நூறு வருடம் உழைக்கும் விசிறி!'' என்று விசிறியைப்
சமயோசித புத்தி!

ஒருவன் விசிறி வியாபாரம் செய்து வந்தான். விசிறிகள் விற்பதற்காக அவன், "விசிறி!....விசிறி!...,நூறு வருடம் உழைக்கும் விசிறி!'' என்று விசிறியைப் பற்றி அதிகப்படியாகக் கூவி விற்று வந்தான். இது உப்பரிகையிலிருந்த அரசரின் பார்வையில் பட்டுவிட்டது.

அவனை வரச்செய்து வசிறிகளை வாங்கினார் அரசர். அவனைப் பார்த்து, "அதெல்லாம் சரி,....இந்த வசிறி நூறாண்டுகள் உழைக்குமா என்ன?...இது பொய்யாயிருந்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன்! பொய் சொல்லிப் பொருளை விற்ற்கு தண்டனையும் உண்டு'' என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

சில மாதங்களிலேயே விசிறி பிய்ந்து போனது. விசிறி வியாபாரி பொய் சொல்லித் தலையில் கட்டுகிறான்....என்பது தெளிவாகிவிட்டது....அவனைச் சும்மா விடக்கூடாது...,தண்டனை வழங்க வேண்டும் என நினைத்து அவனை அழைத்து வரச் சொன்னார் அரசர்!

காவலர்கள் வீதியில் விசிறி விற்பவனைக் கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

"என்னப்பா? உன் விசிறி ஆறு மாதம் கூட உழைக்சவில்லையே...,நீ என்னவோ நூறாண்டு உழைக்கும் என்று பொய் சொன்னாயே?...'' என்று கடிந்து கொண்டார் அரசர்.

"அரசே!....விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ''

"விசிறியை எப்படி உபயோகிக்க முடியும்?...கையில் எடுத்து முகத்துக்கு நேராக வீசித்தானே உபயோகிக்க முடியும்?''
"அது தவறாயிற்றே..., அப்படிச் செய்தால் விசிறிக்கு ஆயுள் சீக்கிரம் முடிந்து விடும்!....நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்......,விசிறியை முகத்துக்கு நேராக விசிறக்கூடாது...,விசிறியைக் கையில் வைத்துக்கொண்டு விசிறியின் முன்பு நம் முகத்தை அப்படியும், இப்படியுமாக ஆட்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த விசிறி நான் சொன்னபடி 100ஆண்டுகள் உழைக்கும்'' என்று கூறினான்.

அரசருக்கு அவன் மீது கோபம் வந்தாலும் அவன் புத்திசாலித்தனத்தை வியந்து " நீ கில்லாடி!'' என்று பாராட்டிவிட்டு, " இப்படிப் பொய் சொல்லி வியாபாரம் செய்யாதே...'' என்று எச்சரித்து அனுப்பினார்.

"சரி அரசே!'' என்று கூறிவிட்டு விசிறி வியாபாரியும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று விறு விறுவென்று அங்கிருந்து கிளம்பினான். அன்று முதல் பொய்கள் சொல்லி வியாபாரம் செய்வதையும் நிறுத்திக் கொண்டான்.
- தீபம் எஸ்.திருமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com