விடுகதைகள்

நல்லாப் பேசுவேன்... படம் காட்டுவேன்... நடக்க மாட்டேன்... நடுவீட்டில் இருப்பேன்...
விடுகதைகள்

1. கோர்த்து வச்ச கொலுசு மணி... தோகையிலே வளர்ந்த மணி...
2. காலில்லை கையில்லை கண்களுண்டு வாலுண்டு... சிறகும் உண்டு...
3. குடிக்கத் தண்ணீர் உண்டு... குளிக்கத் தண்ணீர் இல்லை...
4. நல்லாப் பேசுவேன்... படம் காட்டுவேன்... நடக்க மாட்டேன்... நடுவீட்டில் இருப்பேன்...
5. நாலு கால் எனக்குண்டு... நடக்க மாட்டேன்... என்னைத் தூக்கிட்டுத்தான் போகணும்...
6. வெளியிலே போனால் மட்டும் திறந்திருப்பேன்... உள்ளே வந்தால் மூடிக் கொள்வேன்...
7. நான் வேலை செய்ய வேண்டுமானால் என்னோட தொப்பியை எடுத்துடணும்... இல்லையென்றால் வேலை செய்ய மாட்டேன்...
8. ஒற்றைக்கால் நாராயணன் ஓடையிலே மீன் பிடிக்கி றான்...
9. காலையில் ஊதும் சங்கு கறியாகிப் போவதும் உண்டு...
-ரொசிட்டா
விடைகள்:
1. சோளம்
2. மீன்
3. தேங்காய் தண்ணீர்
4. தொலைக்காட்சிப் பெட்டி
5. நாற்காலி
6. குடை
7. பேனா (மூடி)
8. கொக்கு
9. சேவல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com