அங்கிள் ஆன்டென்னா

ஸ்டார்லிங் என்னும் பறவை ஒரு நாளில் இப்படி 370 முறை பூச்சிகளை அள்ளிக் கொண்டு வந்து சேமிக்கிறது
அங்கிள் ஆன்டென்னா

கேள்வி: 
பறவைகள் எப்போதும் இரை தேடிக் கொண்டே இருக்கின்றன. அவை இரைகளைப் பாதுகாத்து வைத்துப் பசியாறுமா அல்லது 3 வேளை 4 வேளை என பிரித்து வைத்துச் சாப்பிடுமா?

பதில்: 
Dawn to Dusk என்பார்கள்.
அதாவது அதிகாலையில் ஆரம்பித்து அந்தி வரை இரை தேடுவதுதான் பறவைகளின் முழுமையான வேலைலி. இந்தத் தேடலின்போது தேவைக்கேற்ப விருப்ப மானதை விழுங்கிக் கொள்வதோடு மட்டுமன்றி, ஏராளமான இரைகளை வாய் நிறைய வைத்துக் கொண்டு, தம் கூட்டிற்குக்  கொண்டு  வந்து  சேமிப்பதுண்டு. 
ஸ்டார்லிங் என்னும் பறவை ஒரு நாளில் இப்படி 370 முறை பூச்சிகளை அள்ளிக் கொண்டு வந்து சேமிக்கிறது. இப்படி சேமிக்கப்படும் இரையை அதன் குஞ்சுகளும், அடை காக்கும் பெண் பறவைகளும் கூட்டிலிலிருந்து கொண்டே சாப்பிட்டுக் கொள்கின்றன.
இரையைக் கொண்டு வந்து சேர்க்கும் பறவைகளும் கூட்டிலிருக்கும்  சமயங்களில் ஏதோ நொறுக்குத் தீனி சாப்பிடுவது போல் விழுங்குவதுண்டு. அவற்றால் அலகை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை. மற்றபடி நம்மைப்போல் 3 வேளைக்கு  4 வேளைக்கு என்றெல்லாம் சாப்பிடுவது வழக்கமல்ல.

அடுத்த வாரக் கேள்வி
மனிதர்களாகிய நமக்கு உறக்கத்தில் 
கனவு வருவது போல 
விலங்குகளுக்கும் கனவுகள் வருமா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
-ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com