கடி

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலேங்கிற பழமொழி சரியில்லேடா...''"ஏன் அப்படிச் சொல்றே?''
கடி

* "உப்பில்லாப் பண்டம் குப்பையிலேங்கிற பழமொழி சரியில்லேடா...''
"ஏன் அப்படிச் சொல்றே?''
"பின்னே?....,யாராவது அல்வாவை குப்பையிலே எறியுவாங்களா?''
எஸ்.சூர்யா, 
1942, இ.டபிள்யூ, 
எஸ்.பி. காந்திமாநகர், பீளமேடு, கோயம்புதூர்-641004.

* "இந்த வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் பதினெட்டு வயசாகுது....''
"அப்ப இதைக் கூரை வீடுன்னு சொல்லமுடியாது....., ஓட்டு வீடுன்னு சொல்லு''
பி.சரவணன், ஸ்ரீரங்கம். 

* "என்னடா இது? அவரை சமய சொற்பொழிவாளர்னு சொல்றே?...பார்த்தா அப்படித் தெரியலியே''
"சமயத்துக்கு ஏத்த
மாதிரி பேசுறவர்டா அவரு''
வி.எம்.ராஜன், மதுரை.

* "டென்னிஸ் விளையாட்டைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும்....நீ வேணும்னா கேட்டுப்பாரேன்...''
"சரி...,ஓகே....,டென்னிஸ் வலையிலே எத்தனை ஓட்டை இருக்கும்?''
ஏ.ஞானசேகர், 
பழைய விளாங்குடி. 

* "உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா கேளுங்க...''
"என்னை யார் சார் எழுப்பி விட்டது?...''
ஆர்.கவிதா, 
12, பொற்குடம் 
பிரதான சாலை, 
ராம் நகர், 
பைபாஸ் ரோடு, மதுரை-625010.

* "உங்க கடையிலே வாங்கின செருப்பு காலை கடிக்குது''
"அப்போ 'மாலை'யிலே போட்டுப் பாருங்க''
முத்தூஸ், தொண்டி. 

வாரம் 2 டி-சர்ட் பரிசு 
நட்சத்திரக் குறியிட்ட  2 கடிகளும் பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ் வழங்கும் தலா
ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com