சோளக் கொல்லை பொம்மை!

வயல் நடுவே பொம்மை பாரு-சோளக்கொல்லை பொம்மை அதன் பேரு!
சோளக் கொல்லை பொம்மை!

வயல் நடுவே பொம்மை பாரு-சோளக்
கொல்லை பொம்மை அதன் பேரு!
போட்டிருக்கிற ஜிப்பா பாரு! படுஜோரு!
பைஜாமா விலேதான் துளி சேறு!

பொம்மைக்குப் பானை முகமாச்சு
முகமெல்லாம் வெள்ளை அடிச்சாச்சு
வெள்ளையிலே கரும்புள்ளி வெச்சாச்சு
உதடுகள் இரண்டும் சிவப்பாச்சு!

முரட்டு மீசை வரைஞ்சாச்சு
கண்ணுலே பிரகாசம் வந்தாச்சு!
கருப்புத் தொப்பி வெச்சாச்சு
கையில் குச்சி கொடுத்தாச்சு!

பொம்மையும் உருவாகி வந்தாச்சு!-சோளக்கொல்லை
பொம்மையும் உருவாகி வந்தாச்சு!
கொட்டும் மழைக்கு ஒதுங்காது!
எரிக்கும் வெயிலுக்கும் பதுங்காது!
 
கடமையோடு கதிர்களையது காக்கும்-பறவைகள்
எல்லாம் பார்த்து பயங்கொள்ளும்!
நாம பார்த்து ரசிக்கலாம்
நினைத்து நினைத்து மகிழலாம்!

-சாய்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com