அங்கிள் ஆன்டென்னா

அதெல்லாம் இல்லை. சிங்கம், புலிகளை விட வேகத்துக்குப் பேர்போன சிறுத்தைக்கே பெப்பே காட்டக்கூடிய சில வகை மான் இனங்கள் உள்ளன.
அங்கிள் ஆன்டென்னா

கேள்வி: 
வேகமாக ஓடக்கூடிய மான் களைக்கூட சிங்கம், புலி போன்ற விலங்குகள் துரத்திப் பிடித்து சாப்பிடுவதை டிஸ்கவரி சேனலில் பார்க்கிறோம். அவைகளுக்கு இரையாவதற்கென்றே மான்கள் படைக்கப் பட்டுள்ளனவா?

பதில்: 
அதெல்லாம் இல்லை. சிங்கம், புலிகளை விட வேகத்துக்குப் பேர்போன சிறுத்தைக்கே பெப்பே காட்டக்கூடிய சில வகை மான் இனங்கள் உள்ளன.
பொதுவாக சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவை சிறிய கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டுதான் வேட்டையாடும். தனியாகச் சிக்கும் மான்களைக் குறி வைத்துதான் வேட்டை நடக்கும். கூட்டமாகத் திரியும் மான்கள், மாடுகளைக் கண்டால் வேட்டையாடுதை பெரும்பாலான வலிய விலங்குகள் தவிர்த்து விடுகின்றன.
கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் உள்ள காடுகளில் இம்பாலா என்று ஒரு வகை மான்கள் இருக்கின்றன. இவை தரையிலிருந்து 10 அடி உயரத்திற்கு ஜம்ப் செய்யும் திறன் கொண்டவை. 30 அடி தூரத்தை ஒரே தாவலில் கடந்து விடும். சிறுத்தையின் தாவல் இதற்கு முன்னால் சும்மா வெத்துவேட்டுதான்!
இந்த மான்களின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? திசைக்கொன்றாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாலும், தங்கள் கூட்டத்தை விட்டு ஒருபோதும் பிரிந்து நிற்காது. இவற்றைத் தனிமைப்படுத்தவும் முடியாது. ஆகவே மூச்சிரைக்க ஓடி வரும் புலிகள், சிறுத்தைகள் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு வேட்டைக்கு வேறு இடத்துக்குச் சென்று விடும்.
-ரொசிட்டா

அடுத்த வாரக் கேள்வி
நம்மிடையே பீதியைக் கிளப்பும் பறவைக் காய்ச்சல் நோய் எப்படிப் பரவுகிறது? சிக்கன் சாப்பிடவே கூடாதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com