எறும்புச்சாரித் தொடர் வண்டி!

சிந்திக் கிடக்கும் பருக்கை எடுக்கஎறும்புச் சாரித் தொடர்வண்டி!
எறும்புச்சாரித் தொடர் வண்டி!

சிந்திக் கிடக்கும் பருக்கை எடுக்க
எறும்புச் சாரித் தொடர்வண்டி!
வரிசை பிடித்து வருகுது - ஒரு 
வரிசை பிடித்து வருகுது!

வழியில் கோடு வரைந்து கொண்டு
தகவல் சொன்ன சிப்பாய் எறும்பு
படை நடத்திச் செல்லுது-இந்தப் 
படை நடத்திச் செல்லுது!

தோட்ட வேலி தாண்டி வந்து
சமையல் அறைச் சுவற்றில் ஏறி
சன்னல் சந்தில் நுழையுது-சிறு
சன்னல் சந்தில் நுழையுது!

சிறுத்த வாயில் கடித்துப் பார்த்து 
சின்னக்காலால் உருட்டி நகர்த்தி
தூக்கிக் கொண்டு போகுது - துகளை
தூக்கிக் கொண்டு போகுது!

வெளியே ஒரு மிளகாய் விதை
மணம் பரப்பி மயக்கி விட
உடன் எடுத்துக் கொண்டது - அதை
உடன் எடுத்துக் கொண்டது!

ஊர்ந்து வரும் இவர்கள் அழகை
கூர்ந்து பார்த்த குட்டிப் பாப்பா
கையைத் தட்டிச் சிரிக்கிது-தன் 
கையைத் தட்டிச் சிரிக்கிது!

-க.சங்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com