கடி

"வேணாண்டா...,நீ எல்லாரையும் ஊதித் தொந்தரவு பண்ணுவே''"இல்லேப்பா...,பண்ண மாட்டேன்.
கடி

* "அப்பா, பீப்பீ வாங்கித்தாப்பா!''
"வேணாண்டா...,நீ எல்லாரையும் ஊதித் தொந்தரவு பண்ணுவே''
"இல்லேப்பா...,பண்ண மாட்டேன்....,எல்லாரும் தூங்கினப்புறம் ஊதறேன்ப்பா''
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன் கோட்டை.

* "அரிசியை ஏன் கையால குத்தறே?''
"கைக்குத்தல் அரிசி நல்லதுன்னு சொன்னாங்கடா''
மு.சுகுமாரன், 
14/40, பூக்காரத் தெரு, மானாமதுரை-630606.

* "மாயவரத்திலேர்ந்து கும்பகோணம் எவ்வளவு தூரம்?''
"கும்பகோணத்திலேர்ந்து மாயவரம் இருக்கறதூரம்தான்''
எஸ்.கே.சரவணன், 
மயிலாடுதுறை.

* "அப்பா எனக்கு பாட புத்தகம் வாங்கித்தாப்பா!''
"பாட எதுக்கு புத்தகம்? வாய் மட்டும் போதுமே''
மு.நாகூர், 
கீழக்கரை-623517.

* "நான் தினசரி வாக்கிங் போறேன்...''
"நடந்தேவா சார்!!??''
முத்தூஸ் தொண்டி.

* "பொண்ணைப் பாட்டுக் கிளாஸிலே சேர்த்துட்டு நீ ஏன் வீட்டுலே பாடறே?
"இது அவளோட ஹோம் ஒர்க்!''
பர்வதவர்த்தினி, 
5, வீரராகவன் தெரு, 
அண்ணாநகர், 
பம்மல், 
சென்னை-600075.
வாரம் 2 டி-சர்ட் பரிசு 

நட்சத்திரக் குறியிட்ட  2 கடிகளும் பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ் வழங்கும் தலா
ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com