தகவல்கள் 3

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் சென்றுகொண்டு இருக்கும்போது இருப்புப் பாதைக் கதவை சாத்திக்கொண்டிருந்தார்கள்.
தகவல்கள் 3

"கேட்டு' சாத்தறான்!
ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் சென்றுகொண்டு இருக்கும்போது இருப்புப் பாதைக் கதவை சாத்திக்கொண்டிருந்தார்கள். காரில் என்.எஸ்.கிருஷ்ணன் உதவியாளர், "கேட்டு சாத்தறான்!...கேட்டு சாத்தறான்!'' என்றார். கலைவாணரோ, "ஏனய்யா கத்தறீர்?...கேட்டுத்தானே சாத்தறான்....கேக்காம சாத்தினாத்தான் நாம கோபப்படணும்''என்றார் சிலேடையாக!
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

அசடு வழிந்தது!
அமெரிக்காவில் "லாயிட் ஜார்ஜ்' அருமையான வழக்கறிஞர்! சிறந்த பேச்சாளர்! ஒருமுறை நீதிமன்றத்தில் மிகவும் திறமையாக வாதாடிக் கொண்டிருந்தார். ஆனால் நீதிபதி லேசாகக் கண்ணயர்ந்து தூக்கத்தில் இருந்தார். கோர்ட் டவாலிகூட கண்களை மூடியபடி நின்று கொண்டிருந்தார். ஜார்ஜுக்கு ஒரே கோபம்! சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு பேப்பர் வெயிட்டைத் தூக்கி டவாலி மேல் எறிந்தார்! "தடால்' என்ற சத்தத்தைக் கேட்டு நீதிபதி, "இதென்ன மூளை கெட்டதனம்?'' என்று கேட்டார். 
"கனம் நீதிபதி அவர்களே!..., மன்னிக்கவும்!.... மிகத் தீவிரமாக நான் வாதாடிக் கொண்டிருக்கிறேன்......,இந்த டவாலி, தன்னையும் நீதிபதி என்று எண்ணிக்கொண்டு தூங்கி வழிகிறான்!'' என ஜார்ஜ் கூறியதும் நீதிபதி முகத்தில் அசடு வழிந்தது!
ஆ.ராஜா ரஹ்மான், கம்பம்.

அதே நிலைமைதான்!
மார்க் ட்வைன் அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர், மற்றும் பேச்சாளர்! பிரசங்கம் செய்வதற்காக ஒரு ஊருக்குப் போயிருந்தார். சவரம் செய்துகொள்ள ஒரு சலூனுக்குப் போனார். நாவிதருக்கு இவர் யார் என்று தெரியாது. 
"நீங்க வெளியூர் போலிருக்கு...., இன்னிக்கு மார்க்ட்வைன் பேசப்போறார்! நீங்க போகப்போறீங்களா?'' என்று கேட்டார். 
"ஆமாம் போகப்போறேன்''
"டிக்கட் வாங்கிட்டீங்களா?''
"ம்ஹூம் வாங்கலே''
"அப்படீன்னா நீங்க நிக்க வேண்டியதுதான்!''
"ஆமாம் ஒவ்வொருமுறையும் மார்க்ட்வைன் பிரசங்கத்தின் போது எனக்கு அதே நிலைமைதான்!'' என்றார் மார்க்ட்வைன்!
ஆ.கோலப்பன், கோட்டாறு.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com