தகவல்கள் 3

அன்று மடத்திற்கு வந்த சிறுவனிடம், "நீ எழுதிய கவிதை ஒன்று கப்பலில் வந்தது!'' என்றார் சாந்தலிங்கத் தம்பிரான்.
தகவல்கள் 3

கப்பலில் கவிதை!
அன்று மடத்திற்கு வந்த சிறுவனிடம், "நீ எழுதிய கவிதை ஒன்று கப்பலில் வந்தது!'' என்றார் சாந்தலிங்கத் தம்பிரான். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "எப்படி ஐயா?'' என்றான் பணிவுடன். 
"இன்று காலை குளக்கரை படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தபோது தத்தித் தத்தி என்னருகில் மிதந்து வந்த ஒரு காகிதக் கப்பலை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். அதில் வெண்பாக் கவிதை ஒன்று எழுதப்பட்டிருந்தது!'' என்று கூறி அதை வாசித்தார். "இது யார் எழுதியது?''என்றும் கேட்டார் தம்பிரான். 
 "ஐயா அடியேன் எழுதியதுதான்'' என்றான் சிறுவன். "இப்போது சொல்! இது கப்பலில் வந்த கவிதைதானே என்றார் தம்பிரான் புன்சிரிப்புடன்! அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் "கவிமணி' என்று புகழப்பட்ட தேசிகவிநாயகம் பிள்ளை!
உ.ராமநாதன், நாகர்கோவில்.  

இது வேறு ஈ!
சார்லி சாப்ளின் ஒருமுறை ஸ்டுடியோவில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு ஈ அவரைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஈ அடிக்கும் மட்டை ஒன்றை வரவழைத்தார். அப்போது அவருக்கு எதிரே மேஜையின் மீது ஈ வந்து உட்கார்ந்தது. ஆனால் அதை சார்லி சாப்ளின் அடிக்கவில்லை.  ஏன் என்று எதிரில் இருந்தவர் கேட்டார். அதற்கு சாப்ளின், "என்னைத் தொந்தரவு செய்த ஈ இது இல்லை! இது வேறு ஈ!'' என்றார். 
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை.

எனக்காக!
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நீதிபதி "ஆலிவர் வென்டல் ஹோம்ஸ்' அருகே டிக்கெட் பரிசோதகர் வந்து நின்றார். அப்போது ஹோம்ஸ் தன் பயணச் சீட்டைத் தேடி எடுக்க முனைந்தார்.
 டிக்கெட் பரிசோதகர், "நீதிபதி அவர்களே! நீங்கள் கட்டாயம் பயணச்சீட்டு வாங்கியிருப்பீர்கள்! அதனால் அதைத் தேட அதிகச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்றார்.
 "உங்களுக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவாவது அதைத் தேடவேண்டும்....ஏனெனில் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரிய வேண்டுமே!'' என்றார் நீதிபதி.
க.சங்கர், கோபிசெட்டிபாளையம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com