அங்கிள் ஆன்டெனா

இந்தப் பூச்சிகளின் உடலில் அடினோசைன் டிரைபாஸ்பேட், மக்னீசியம், லூசிபெரின் போன்ற ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
மின்மினிப் பூச்சிகளில் பல வண்ணங்களில் மின்னு கின்றவை இருக்கின்றனவா? எப்படி மின்னுகின்றன?

பதில்: 
மின்மினிப் பூச்சிகளிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானவற்றில் மகளிர் (பெண் பூச்சிகள்) மட்டுமே மின்னும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள். சில அபூர்வ இனங்களில் ஆண் பூச்சிகளும் மின்னுவதுண்டு. ஆனால் அவற்றின் ஒளி பிரகாசமாக இருக்காது. கொஞ்சம் டல்லாகத்தான் இருக்கும். 
இந்தப் பூச்சிகளின் உடலில் அடினோசைன் டிரைபாஸ்பேட், மக்னீசியம், லூசிபெரின் போன்ற ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன. இப் பூச்சிகளின் அடிவயிற்றில் இருக்கும் காற்றுக் குழாய்களில் இருந்து வரும் ஆக்ஸிஜனோடு இந்த ரசாயனப் பொருட்கள் வினை புரிவதால் ஒளி பிறக்கிறது. மற்றபடி மின்மினியின் உடலில் பேட்டரி எல்லாம் கிடையாது, சார்ஜ் போடுவதெல்லாம் கிடையாது. 
மாறுபட்ட வண்ணங்களில் மின்னுகின்ற பூச்சிகளும் இருக்கின்றன. 
பராகுவே என்னும் பூச்சி பச்சை நிறத்திலும் போட்டிரஸ் என்னும் பூச்சி சிவப்பு நிறத்திலும், பென்சில்வேனியா என்னும் பூச்சி மஞ்சள் நிறத்திலும் ஒளி வீசக்கூடியவை. இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வானில் பறக்க ஆரம்பித்துவிட்டால், விண்ணில் சீரியல் செட் போட்டது போல, ஒரே கொண்டாட்டம்தான். 
அடுத்த வாரக் கேள்வி
பூரான் கடித்தால், ஒவ்வொரு அமாவாசையன்றும் கடிபட்டி இடத்தில் அரிப்பு எடுக்குமாமே? இது உண்மையா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com