தகவல்கள் 3

அரசியல் அறிஞர் லாயிட் ஜார்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மட்டம் தட்ட எண்ணிய ஒருவன் எழுந்து,
தகவல்கள் 3

கண்டு கொண்டேன்!
அரசியல் அறிஞர் லாயிட் ஜார்ஜ் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மட்டம் தட்ட எண்ணிய ஒருவன் எழுந்து, " உங்க தாத்தா கழுதை வண்டி ஓட்டியவர் என்பது ஞாபகம் இருக்கிறதா?'' என்று ஏளனம் செய்தான். 
உடனே லாயிட் ஜார்ஜ், "என் தாத்தாவின் வண்டி தொலைந்து விட்டது....கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்போது கண்டு கொண்டேன்..'' என்றவுடன் அரங்கமே சிரித்தது!
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை. 

என்ன செய்ய முடியும்?
"பெர்னார்ட் ஷா'வின் "பிக்மாலியன்' என்ற நாடகம்  நடிக்கப்பட்டது.  முடிவில் அனைவரும் கை தட்டித் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள். ஆனால் ஒருவர் மட்டும், "இந்த நாடகம் நன்றாக இல்லை....'' என்று கத்தினார்.  ஷா அவரைப் பார்த்து, "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....,ஆனால் இத்தனை பேருக்கு முன் நாம் மட்டும் என்ன செய்ய முடியும்?''என்றார். அங்கு சிரிப்பலை தோன்றியது!
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை.

செயலில் கவனம்!
இசைஞானி "ஆர்ட் டஸ்கனி'யின் எண்பதாவது பிறந்த நாளுக்கு வந்திருந்தவர்களில் சிலர் அவர் மகன் "வால்டர்'  என்பவரிடம், "தங்கள் தந்தையார் செய்தவற்றுள் எதை மிகச் சிறந்த சாதனையாகக் கருதுகிறீர்கள்?'' என்று கேட்டனர். 
அதற்கு வால்டர், "அவரைப் பொருத்தவரை அப்படியெல்லாம் எதுவும் கிடையாது....., அவர் இசைக் குறிப்பை எழுதினாலும் சரி, ஆரஞ்சுப் பழத்தோலை உரித்தாலும் சரி,.....அந்த நேரத்தில் எதைச் செய்கிறாரோஅதில் முழு கவனமும் அக்கறையும் கொண்டிருப்பார்!'' என்றார்!  டஸ்கனியின் செயல் ஈடுபாட்டைக் கேட்டு அனைவரும் வியந்தனர். 
அ.கருப்பையா, 
பொன்னமராவதி.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com