விடுகதைகள்

குதிரில் கொட்டி வைக்காத தானியம், கொடைவள்ளல் கொடுக்காத தானியம். அது என்ன?
விடுகதைகள்

1. பரந்து விரிந்தவன், பல வண்ணம் காட்டுவான்...
2.  காட்டிலே இருக்கும் குடை, வீட்டிலே இருக்காது...
3.  கண் ஆயிரம் கொண்ட கண்ணாயி, விண்ணைப் பார்த்து ஆடும் விசிறி உடம்புக்காரி, ஆடினால் காற்று வீசும், அடுத்து அங்கு வானம் அழும்... யார் இவள்?
4.  கைப்பிடியில் அடங்கி காதோடு உறவாடும், உன்னோடும் என்னோடும் உரையாடிக் கொண்டிருக்கும் உறவுகளைப் பெருக்கும் உன்னத பேச்சாளி...
5. நீரில் வேட்டையாடும் எங்கள் ஊர் வெள்ளைச்சாமி, வலையின்றி மீன் பிடிப்பதிலும் கெட்டிக்காரன்...
6. ஒன்றை ஒன்று பார்க்காது, ஒன்றாய் எதையும் பார்க்காது...
7.  சட்டி வயிற்றிலே வெள்ளை முத்துக்கள்...
8.  மாரியில்லாமல் ஆமை கெட்டது, ஆமை இல்லாமல் சீமை கெட்டது...
9.  குதிரில் கொட்டி வைக்காத தானியம், கொடைவள்ளல் கொடுக்காத தானியம். அது என்ன?
-ரொசிட்டா
விடைகள்:
1. வானம்
2. காளான் (நாய்க்குடை)
3. மயில்
4. செல்போன்
5. கொக்கு
6.  கண்கள்
7. சோறு
8. வேளாண்மை
9. ஆற்று மணல்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com