தகவல்கள் 3

இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழி பெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர்.
தகவல்கள் 3

ஏன் வரவில்லை? 
இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழி பெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர். அவரது இந்திய நண்பர் ஒருவர்,  "நீங்கள்  இந்தியாவுக்கு வர வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மாக்ஸ் முல்லர், "நான் வருவதற்கில்லை. ஏனெனில், புராதனமான பண்பாடு நிறைந்த முனிவர்கள் வாழ்ந்த இந்தியாவிலேயே அவர்களது உன்னதத் தத்துவ நூல்கள் மூலம் வாழ்ந்து விட்டேன்.  நான் அங்கே வந்தால் ....,திரும்ப முடியாது!'' என்று கூறி மறுத்துவிட்டார்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

கடவுள் படைத்தது!
தாமஸ் பெயின், உலகப் புகழ் சிந்தனையாளர், எழுத்தாளர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனிடம் அமைச்சராக இருந்தவர். ஒருநாள் ஒரு பாதிரியார் கடவுள் ஏழைகளின் மேல் பணக்காரர்கள் கருணை காட்டும்படி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
தாமஸ் பெயின் எழுந்து "பணக்காரரையும் ஏழையையும் கடவுள் படைக்கவில்லை.  மனித குலத்தைத்தான் படைத்தார். அவர்களுக்காக அனைத்தையும் படைத்தார்...ஆனால் சுயநலத்தால் சில மனிதர்கள் பணக்காரர்களாக  ஆகிவிட்டனர்!''  என்றார்.
அ.ராஜா ரஹ்மான், கம்பம்.

கொடிய மிருகம்
"கொடிய மிருகம் எது?''  என்று தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் கேட்டார் அவரது சீடர்.  அதற்கு அரிஸ்டாட்டில்,  "நாக்குதான்! ஒருமுறை அதை அவிழ்த்து விட்டால், திரும்பக் கட்டுவது கடினம்'' என்றார்.
நெ.இராமன், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com