அங்கிள் ஆன்டெனா

இப்படித்தான் பல பேர் பல கப்சாக்களை விட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கடைந்தெடுத்த பொய். 
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
பாம்பு கொத்தியவுடன், கீரி ஏதோ ஒரு மூலிகையைச் சாப்பிட்டு, உயிர் பிழைத்துக் கொள்கிறதாமே உண்மையா? அது என்ன அப்படிப்பட்ட அபூர்வ மூலிகை?
பதில்: 
இப்படித்தான் பல பேர் பல கப்சாக்களை விட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கடைந்தெடுத்த பொய். நம்பவே நம்பாதீர்கள்.
கீரிக்கு சில மூலிகைகளை அடையாளம் தெரியும். ஆனால் பாம்புக் கடிக்கு இந்த மூலிகைகள் உதவுவது இல்லை. 
உங்க வீட்டுப் பூனையைக் கவனித்துப் பார்த்தீர்களானால், சமயங்களில் அருகிலுள்ள தோட்டத்தில், குறிப்பிட்ட ஒரு செடியைப் பிராண்டித் தின்று கொண்டிருக்கும். இதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். தனக்குத் தேவையானவற்றை, டாக்டரிடம் போகாமலேயே அவை பெற்றுக் கொள்ளத்தான் கடவுள் இத்தகைய வரத்தை உயிரினங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
இதை வைத்துக் கொண்டு பலவிதமான புரளிகளைக் கிளப்பி விடுவது மனிதர்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது.
இதனால்தான் பட்டுக்கோட்டையார், "வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க, அதை வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே' என்று அக்கறையோடு பாடி வைத்தார்.
அடுத்த வாரக் கேள்வி
உலகில் மொத்தம் எத்தனை பூச்சி இனங்கள் உள்ளன என்று சொல்ல முடியுமா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com