கடி

தீபாவளிக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கும் போது கண்ணிலே சீயக்காய்ப்பொடி பட்டுடுச்சு... ஆனா அப்பக்கூட நான் அழவே இல்லே!
கடி

• "தீபாவளிக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கும் போது கண்ணிலே சீயக்காய்ப்பொடி பட்டுடுச்சு... ஆனா அப்பக்கூட நான் அழவே இல்லே!''
"பரவாயில்லியே  வெரிகுட்!''
"குட்டிப் பாப்பாவைக் குளிப்பாட்டும்போது நான் எதுக்கு அழணும்?''
ஆர்.யோகமித்ரா, 
எஃப் 2, கிருஷ்ணா அபார்ட்மெண்ட், பிளாட்20, சுந்தர் அவென்யூ, மகாசக்தி காலனி, செம்பாக்கம், சென்னை - 600073.

• "அல்வா நல்லாயிருக்கா சொல்லுடா''
"நழ்ழாயிழுக்கு''
"சரியாச் சொல்லேண்டா....வாயிலே என்ன கொழுக்கட்டையா?''
"இழ்ழே....அழ்வா''
சுமன், நீலாங்கரை.

* "மரங்கொத்தி மார்க் வெடியை வாங்கினது தப்பாப் போச்சுடா!...''
"ஏன்?...என்னாச்சு?''
"எல்லா வெடிகளும் "டொக்...டொக்...டொக்...டொக்'குன்னு வெடிக்குதுடா!''
சின்னஞ்சிறுகோபு, சென்னை.

* "எதுக்கு ஷார்ப்பனர் கொடுக்கறீங்க?''
"இந்த பென்சில் வாணத்துக்கு இலவசம்!.... நல்லா சீவிட்டுக் கொளுத்துங்க!''
சின்னஞ்சிறுகோபு, சென்னை.

* "அப்பாவுக்குத் தெரியாம நீ வெடி வாங்கினது எப்படித் தெரிஞ்சுது?''
"தம்பி பத்த வெச்சுட்டான்!''
சின்னஞ்சிறுகோபு, சென்னை.

* "இந்த ரயில்லே எத்தனை பெட்டி? ...சொல்லு...பார்க்கலாம்!...''
"அதெப்படி எனக்குத் தெரியும்? நான் கொண்டு வந்தது ரெண்டு பெட்டி! ''
என்.பர்வதவர்த்தினி, 5, வீரராகவன் தெரு, அண்ணா நகர், பம்மல், 
சென்னை - 600075.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக்  குறியிட்ட   2 கடிகளும்  பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ்  வழங்கும் 
தலா ஒரு  டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு  பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com