அங்கிள் ஆன்டெனா

கடற்கரை மணலை எண்ணுவது போன்ற சமாசாரம் இது. இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சி வகைகள்
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: உலகில் மொத்தம் எத்தனை பூச்சி இனங்கள் உள்ளன என்று சொல்ல முடியுமா?
பதில்:   கடற்கரை மணலை எண்ணுவது போன்ற சமாசாரம் இது. இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அப்படியென்றால் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வாழும் பூச்சிகள் எத்தனை வகைப்படும், எவ்வளவு இனங்கள் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தலை சுற்றுகிறதல்லவா?ஆனாலும் நம்மாளுங்க கில்லாடிங்க. ஒரு மாதிரி குன்சா ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். அதன்படி, சொல்கிறேன்... நீங்களே கால்குலேட்டர் வைத்துக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் சரி, வேறு எப்படிக் கணக்கிட்டாலும் சரி...
பூச்சிகள் பற்றி ஆராய்ச்சி  செய்யும் விஞ்ஞானிகள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். அதன்படி உலகப் பூச்சிகள் அனைத்தையும் தேடிப் பிடித்து, அத்தனையையும் ஒரு அங்குல நீளத்துக்குப் பத்துப் பூச்சிகள் என்று ஊர்வலம் போகச் செய்ய வேண்டும். இந்த ஊர்வலத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்க்க வேண்டுமென்றால் எவ்வளவு தூரம் நாம் பயணம் செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு வினாடிக்கு  2 லட்சத்து 95 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் போனால்கூட, இந்த ஊர்வலம் முழுவதையும் பார்த்து முடிக்க நமக்கு 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் ஆகுமாம்! அம்மாடியோவ்.... 
இதெல்லாம் முடிகிற காரியமா?     
அடுத்த வாரக் கேள்வி
தண்ணீர் இல்லாத வறண்ட பகுதிகளில் வாத்துகளை வளர்க்க முடியுமா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com