அர்ஜுனனும் கிருஷ்ணனும்!

காபாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். ஸ்ரீகிருஷ்ணரே தனக்கு தேரோட்டியாக வந்தது பற்றி அர்ஜுனனுக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது!  யுத்தம் முடிந்து தேரில் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணனும் அ
அர்ஜுனனும் கிருஷ்ணனும்!

காபாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். ஸ்ரீகிருஷ்ணரே தனக்கு தேரோட்டியாக வந்தது பற்றி அர்ஜுனனுக்கு கர்வம் ஏற்பட்டு விட்டது!  யுத்தம் முடிந்து தேரில் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் கிருஷ்ணனும் அர்ஜுனனும். 
"நீ தேரிலிருந்து இறங்கி என் கையைப் பிடித்துக் கீழே என்னை இறக்கி விடுவாய் கிருஷ்ணா!'' என்றான் அர்ஜுனன். 
"முடியாது!...நீ  தானே இறங்குவாயாக!''
"தேரோட்டி எஜமானனின் வார்த்தைகளைத் தட்டலாமா? நான் இறங்குவதற்கு கை கொடுப்பாய்!''
"நீ என்ன தள்ளாத கிழவனா? இறங்கு!'' கடிந்து கொண்டான் கிருஷ்ணன் தேரிலிருந்து இறங்காமல்!
பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கினான் அர்ஜுனன். 
கிருஷ்ணன் தேரை விட்டுக் கீழே இறங்கினான். 
 தேர் முழுவதும் ஒரே வினாடியில் தீப்பற்றி எரிந்தது! 
அர்ஜுனன் திகைத்து விட்டான்! 
 "என்ன திகைத்து விட்டாயா அர்ஜுனா!...நினைவிருக்கிறதா?...கர்ணன் நாகாஸ்திரம் உபயோகித்தானே....அப்போது நான் தேர்த்தட்டை அழுத்தியதால் உன் தலை தப்பியது! ஆனால் அந்த அஸ்திரத்தின் சக்தி முழுவதையும் உன் தேரில் கொடியாக அமர்ந்தானே அனுமன்!....இத்தனை நேரம் எனக்காகத் தாங்கிக் கொண்டிருந்தான். இப்போது நான் இறங்கினேன் அனுமனும் விடை பெற்றான்! அதனால் தேர் எரிந்து சாம்பலாயிற்று! இப்போது நினைத்துப் பார்! நான் மட்டும் கீழே  இறங்கி உனக்குக் கை கொடுத்திருந்தால் நீயும் சேர்ந்து எரிந்திருப்பாய்! புரிகிறதா?....கர்வப்படாதே!''
  "கிருஷ்ணா!...என்னை மன்னித்து விடு!....ஒரு வினாடி கர்வம்கூட ஒரு வம்சத்தையே அழிக்கும் ஆயுதம் என்பதை இப்போது புரிந்து கொண்டேன்!'' என்றான் அர்ஜுனன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com