கடி

"நீரில் வாழும் உயிரினங்கள்...,தரையில் வாழும் உயிரினங்கள்....என்ன வேற்றுமை?''
கடி

* "நீரில் வாழும் உயிரினங்கள்...,தரையில் வாழும் உயிரினங்கள்....என்ன வேற்றுமை?''
"நீரில் வாழும் உயிரினங்கள் எப்பப் பாத்தாலும் குளிக்கும்!...தரையில் வாழும் உயிரினங்கள் எப்பவாவது குளிக்கும்!''
எஸ்.முத்தமிழ்செல்வன், சென்னை.

* "மதுரை போற பஸ் எப்போங்க வரும்?''
"தெரியலையே அங்கே போய்க் கேளுங்க''
"இதென்ன விசித்திரமா இருக்கு?....அங்கே போய் சத்தம் போட்டுக் கேட்டா மட்டும் உங்களுக்குத் தெரியுமா?''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி 
திருத்துரைப்பூண்டி -614715.

* "....ஹூம்....அசோகர்  நிழல் தரும் மரங்களை நட்டார்!''
"அதுக்கு ஏன் சலிச்சுக்கறே....நல்லதுதானே செஞ்சிருக்கார்''
"பழம் தரும் மரங்களை நட்டிருக்கலாம்!''
ஏ.நாகராஜன், சென்னை

* "தலைவர் பேசற மேடையில் பேச எனக்கும் ஆசையா இருக்கு!''
"அதனால என்ன....காலையில் வாங்க....மேடை ஃப்ரீயாத்தான் இருக்கும்!''
எம்.அசோக்ராஜா, அசூர்.

* "எங்க அண்ணன் பட்டம் வாங்கிட்டான்!''
"அப்படியா?  அப்புறம் என்னடா பண்ணப்போறான்?''
.நூல் வாங்கச் சொல்றான்!''
தீ.அசோகன், 
18/3, நடராஜ தோட்டம், முதல் தெரு, 
திருவொற்றியூர்600019

* "பாலுவைப் பாக்க வெச்சுட்டு வடை சாப்பிட்டா எனக்கு வயித்தை வலிக்கப்போவுதுன்னு அவனுக்கும் ரெண்டு வடையைக் கொடுத்தேன்!''
"வெரிகுட்!.....அப்புறம்?''
"இப்ப ரெண்டு பேருக்கும் வயித்தை வலிக்குது!''
ஆர்.யோகமித்ரா, சென்னை.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக்  குறியிட்ட   2 கடிகளும்  பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ்  வழங்கும் 
தலா ஒரு  டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு  பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com