அங்கிள் ஆன்டெனா

யாராவது கிச்சுகிச்சு மூட்டினால் நமக்கு ஏன் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: யாராவது கிச்சுகிச்சு மூட்டினால் நமக்கு ஏன் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது?

பதில்: உங்களை ஒருவர் தொடும்போது, தோலின் அடிப் பகுதியில் உள்ள நாளங்களின் முனைகள் (எபிடெர்மிஸ் என்பதற்கு இந்த முனைகளுக்குப் பெயர்) மின்சார சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகின்றன. ஆனால் நீங்கள் கிச்சுகிச்சு மூட்டும்படும்போது (அக்குள் பகுதி மற்றும் பாதத்தின் உள்பக்கங்கள்) இதே சமிக்ஞைகள் சந்தோஷ சமிக்ஞைகளாக மாற்றப்படுகின்றன. இதற்குக் காரணம் úஸாமாடோசென்சரி என்ற நாளங்கள். இவை சமிக்ஞைகளுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதால்தான் நமக்கு சிரிப்பு வருகிறது.
இந்த கிச்சுகிச்சுவே ஒரு தற்காப்பு முயற்சிதான் என்கி றார்கள் ஆராய்ச்சியாளர்கள். பரிணாம வளர்ச்சிப்படி, கிச்சுகிச்சு மூட்டப்பட்டவுடன் நாம் சிரிப்பதற்குக் கார ணம் - முதலில் கிச்சுகிச்சுவாக, மென்மையாக இருக்கும் இந்த அன்புத் தொல்லை, கிள்ளுவது கடிப்பது போன்ற துன்பம் தரக்கூடிய செயல்களாக மாறி விடுவதைத் தடுக்கும் நோக்குடன்தான் நம்மை இடைவிடாமல் சிரிக்க வைத்து எதிராளியிடமிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது மூளை.
நமது மூளையின் திறனில் சுமார் 10 சதவீதத்தைத்தான் நாம் உபயோகிக்கிறோம் என்கிறார்கள். இந்தக் குறைவான பயன்பாட்டிலேயே எப்பேர்ப்பட்ட செயல்களையெல்லாம் நமது மூளை செய்கிறது என்பது வியக்க வைக்கிறதல்லவா!.
ஒரு கொசுறு செய்தி... கொரில்லாக்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டினால், அவை இடைவிடாமல் சிரிக்குமாம்... துணிச்சல் உள்ளவர்கள் முயன்று பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com