அங்கிள் ஆன்டெனா

நாம் மகிழ்ச்சியாக இருந்தால் சிரிக்கிறோம்... துக்கமாக இருந்தால் அழுகிறோம். ஓகே! ஆனால் பிறர் தடுக்கி விழுவதைப் பார்த்தவுடன் முதலில் நமக்கு ஏன் சிரிப்பு வருகிறது,
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: 
சரி, யாராவது தடுக்கி விழுவதைப் பார்த்தவுடன் முதலில் நமக்கு ஏன் சிரிப்பு வருகிறது?

பதில்: 
நாம் மகிழ்ச்சியாக இருந்தால் சிரிக்கிறோம்... துக்கமாக இருந்தால் அழுகிறோம். ஓகே! ஆனால் பிறர் தடுக்கி விழுவதைப் பார்த்தவுடன் முதலில் நமக்கு ஏன் சிரிப்பு வருகிறது, அது துக்கமான சமாசாரம் அல்லவா? பின் ஏன் சிரிக்கிறோம்... சில வாண்டுகள் விழுந்து விழுந்து கூடச் சிரிப்பதைப் பார்த்திருக்கிறோம்... அப்போதெல்லாம் தடுக்கி விழுந்த மனிதர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா?
சரி, பதிலுக்கு வருவோம்... ஒருவர் தடுக்கி விழுவதைப் பார்த்தவுடன் நமக்கு முதலில் ஏற்படும் எண்ணம் (சென்ற வாரமே படித்திருக்கிறோம்... மூளை அதி
விரைவாக கட்டளைகளை அனுப்புகிறது என்று...) இப்படி நடப்பதற்கு சாத்தியமில்லை என்பதுதான். அதாவது தடுக்கி விழுவது என்பது தேவையில்லாத, நம்மால் முடியாத ஒன்று என்று நமது மனம் நினைக்கிறது.  "இம்பாசிபிள்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுதான். இப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று எண்ணும்போது நம்மையறியாமல் நமக்குச் சிரிப்பு வந்துவிடுவதுதான் காரணம். விஞ்ஞானிகள் இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். அதாவது நாம் சிரிப்பதைப் பார்த்து என்னவோ ஏதோ என்று மற்றவர்கள் கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படி நம்மை அறியாமலேயே தடுக்கி விழுந்த மனிதருக்கு, அவர்களை உதவி செய்ய வைக்கிறோமாம்... நல்ல வேடிக்கைதான்...  
-ரொசிட்டா 
அடுத்த வாரக் கேள்வி
பல பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து செல்கின்றன... வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருடம்தோறும் விசிட் செய்கின்றன. இப்படி எத்தனை 
தூரத்துக்கு அவை பயணம் செய்யும்...?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com