ஏளனம் செய்யாதே!

பணக்கார வீட்டு நாய் டாமிக்கு கொஞ்சம் கர்வம் அதிகம்! இருக்காதா பின்னே?  வேளைக்கு ருசியான சாப்பாடு
ஏளனம் செய்யாதே!

பணக்கார வீட்டு நாய் டாமிக்கு கொஞ்சம் கர்வம் அதிகம்! இருக்காதா பின்னே?  வேளைக்கு ருசியான சாப்பாடு! பிஸ்கட்டுகள்! வாரம் ஒரு முறை கறி சோறு! கொஞ்சி விளையாட ஆட்கள்! சும்மா கொஞ்சம் உடம்பு சரியில்லேன்னாக்கூட உடனே மருத்துவம்! அது மட்டுமா? வெளியில் எப்போ போனாலும் கார் சவாரி! 
ஆனா பாவம் ஜிம்மி  ஒரு தெரு நாய்!  ரொம்ப நாள் பேர்கூட இல்லாமத்தான் இருந்தது! கோடி வீட்டு முருகேசன்தான் ஜிம்மின்னு பேர் வெச்சான்! அன்னிக்கு ஜிம்மிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா பொழப்பு மோசமாத்தான் இருந்தது! எங்கே சோறு கிடைக்கும்னு தெரியாது! அடிக்கடி சாலையை க்ராஸ் பண்ண வேண்டியிருக்கும்!......தெருவிலே வண்டிகள்ளே அடிபடாம எதிரே இருக்கிற டீக்கடைக்குப் போனா சில சமயம் புண்ணியவான்கள் யாராவது "பொறை' போட்டால் உண்டு!  பணக்கார நாய் டாமி வீட்டிலேயும் சில சமயம் ஏதாவது மீந்து போனதை கொண்டு வந்து கொட்டுவாங்க.... ஓரிரு நாட்கள்ளே பட்டினி கூட கிடந்துடும்.
 அடிக்கடி டாமி, ஜிம்மியைப் பார்த்து, "பார் நான் கார்லே போறேன்....நீயோ தெருவில் நிற்கிறாய்!'' என்று ஏளனமாகப் பேசும்! ஜிம்மிக்கு வருத்தமாத்தான் இருக்கும்! என்ன செய்யறது? அது டாமியைப் பார்த்து, "எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்!....என் விதி! இப்படி சோத்துக்கு அலையறா மாதிரி ஆயிடுச்சு!....நாயாப் பொறந்தாலும் நீயாவது கார்லே போறியே அதுவே எனக்கு சந்தோஷம்தான்!'' என்று சொல்லி விட்டு வாலைக் குழைத்துக் கொண்டு ஓடிவிடும்! அடிக்கடி இந்தமாதிரி டாமி கிண்டல் பண்ணும்!

 ஒரு நாள்.....
டாமியை கழுத்துப் பட்டையைச் சேர்த்து தூண்லே கட்டிப் போட்டிருந்தாங்க....அப்ப,....டாமி வீட்டுக்குள்ளே ஒரு பாம்பு! 
ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போயிடுச்சு!....டாமிக்கு என்ன செய்யறதுன்னே  தெரியலே....நல்லா வள்வள்னு குரைச்சுது!  ஆனா அதால எதுவும் செய்ய முடியலே.....பாம்பு உள்ளே நுழையறதை ஜிம்மியும் பார்த்தது!  உள்ளே போக பயமாவும் இருந்தது! ஆபத்துக்குப் பாவமில்லேன்னு உள்ளே போச்சு!  உள்ளே குழந்தை தூங்கிக்கிட்டு இருந்தது! ஜிம்மி பாய்ஞ்சு பாம்பைக் கடிச்சுக் குதறிடுச்சு! நல்ல காலம் குழந்தையைப் பாம்பு கடிக்கலே!....டாமியின் சத்தத்தைக் கேட்ட வீட்டுக்காரம்மா மாடியிலேர்ந்து இறங்கி வந்தாங்க!.....டாமி கட்டிப் போட்டிருந்ததையும். ஜிம்மி, தன் வாயில் செத்த பாம்பை எடுத்துக்கிட்டு போறதையும் பார்த்தாங்க.....குழந்தை நல்லா விளையாடிக்கிட்டு இருந்தது! அந்த அம்மா நிம்மதிப் பெருமூச்சு விட்டாங்க....நடந்ததை அந்த வீட்டு எஜமானர் கிட்டே சொன்னாங்க....அன்னியிலேர்ந்து அந்த வீட்டிலே ஜிம்மியையும் சேர்த்து வளர்க்கிறாங்க.......அதுவும் இப்பவெல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு கார்லே போயிக்கிட்டு இருக்குது!
டாமியும் இப்ப அதை ஏளனமா பேசறதில்லே!

-பத்மா சாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com