கடி

"எதுக்குடா படி ஏறும்போதெல்லாம் சிரமப்பட்டு ரெண்டாவது படி மேலே  ஏறிப் போறே?''
கடி

* "எதுக்குடா படி ஏறும்போதெல்லாம் சிரமப்பட்டு ரெண்டாவது படி மேலே  ஏறிப் போறே?''
"தோல்வியே வெற்றிக்கு முதல் படின்னு காலண்டரில் போட்டிருக்கு....எதுக்கு தோல்விப்  படியில் கால் வைக்கணும்?''
ஆர்.யோகமித்ரா, செம்பாக்கம். 

* "நீ மாமரத்திலேயிருந்து கீழே விழுந்துட்டியாமே?.... கிளையைப் நல்லாப் பிடிச்சுக்க வேண்டியதுதானே!''
"ரெண்டு கையிலேயும் மாங்கா இருந்துச்சே!''
மு.பெரியசாமி,  விட்டுக்கட்டி - 614715

* "காம்பவுண்ட் சென்டன்ஸுக்கு உதாரணம் சொல்லு''
"இங்கு நோட்டீஸ் ஒட்டக் கூடாது!''
பி.வி.அப்ஜித், சென்னை. 

• "கிரிக்கெட் பற்றி வேகமா ஒரு கட்டுரை எழுதுங்க பார்க்கலாம்! இருபது நிமிஷம் டைம் தர்றேன்!''
"சார் நான் எழுதி முடிச்சுட்டேன்!''
"அதுக்குள்ளேயா? ஆச்சரியமா இருக்கே?... ஒரு நிமிஷம்தானே ஆச்சு! படி பார்க்கலாம்!''
"....மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் நின்று போனது!''
க.நாகமுத்து,  2/93, காளனம்பட்டி, 
குளத்தூர், திண்டுக்கல் - 624005.

• "நான் கணக்குலேயும், அறிவியல்லேயும் சேர்த்து 100 மார்க் வாங்கியிருக்கேன்!''
"கணக்குல எவ்வளவு?...அறிவியல்லே எவ்வளவு?''
"கணக்குலே 10.....,அறிவியல்லே 0!''
கே.ஆர்.உதயகுமார், 
பழைய எண் 38...,புதிய எண் 75, 
பிடாரியார் கோயில் தெரு, முதல்  மாடி பின்கட்டு, சென்னை - 600001

• "நான் எப்பவும் தலைக்கு ஷாம்பூ  உபயோகிப்பேன்!....நீ?''
"நான் குளிக்கும்போது மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்!''
அ.ராகவ், காஞ்சிபுரம்.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக்  குறியிட்ட   2 கடிகளும்  பட்டுக்கோட்டை  ரூபி  ரெடிமேட்ஸ்  வழங்கும் 
தலா ஒரு  டி-சர்ட்டைப் பெறுகின்றன.  பரிசு  பெற்றவர்களுக்கு  வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com