தகவல்கள் 3

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். மனைவி டி.ஏ.மதுரத்துடன் நாகர்கோவிலில் அவரது நெருங்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
தகவல்கள் 3

டீயே மதுரம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். மனைவி டி.ஏ.மதுரத்துடன் நாகர்கோவிலில் அவரது நெருங்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தார். நண்பரின் மனைவி கலைவாணரிடம், " உங்களுக்கு காபியா,...டீயா...எது வேண்டும்?'' என்று கேட்டார்.  உடனே கலைவாணர், "டீயே மதுரம்!'' என்றார். அதைக் கேட்டு வீட்டிலிருந்த எல்லோரும் சிரித்து விட்டனர். (மதுரம் என்றால் இனிப்பு (இனியது) என்பது பொருள்)
உ.ராமநாதன், நாகர்கோவில்.

கோமாளி!
மான்செஸ்டரில் இருக்கும் மருத்துவர் ஜேம்ஸிடம் ஒருவர் வந்தார். "கவலையை மறக்கு எனக்கு வழி தெரியவில்லை!''என்றார். அதற்கு ஜேம்ஸ், "அருகில் சர்க்கஸ் நடக்கிறது. அங்கே கோமாளி பல வேடிக்கைகள் செய்வார். அதைக் கண்டால் நீங்கள் கவலை மறந்து வயிறு குலுங்கச் சிரிப்பீர்கள்!''என்றார். 
"டாக்டர் அந்த சர்க்கஸ் கோமாளி நான்தான்!'' என்றதும் டாக்டர் செய்வதறியாது சற்று நேரம் விழித்தார்!
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

மாதவம்!
ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் நாமக்கல் கவிஞரைக் காணச் சென்றிருந்தார். "என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்!'' என்றார் கவிஞர். அதற்கு, "என்ன மாதவம் செய்தது இச்சிறு உடல்!'' என்றார் ரசிகமணி!
முல்லை மு.பழநியப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com