பொன்மொழிகள்!

தன் பிரச்னைகளைத் தீர்ப்பதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் உலகப் பிரச்னையைத் தீர்க்க வழி வகுக்கலாம்.
பொன்மொழிகள்!

• சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகிறீர்கள். ஆனால் அது உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. திருப்தியான மனம் எல்லோருக்கும் அதைத் தருகிறது.
-ஹொரேஸ்

• எவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்!
-காந்தியடிகள்

• தன் பிரச்னைகளைத் தீர்ப்பதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் உலகப் பிரச்னையைத் தீர்க்க வழி வகுக்கலாம்.
-கதே

• ஒரு மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு. ஆனால் அம்மனிதனை வெறுக்காதே.
-ஷேக்ஸ்பியர்

• தன் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படுகின்ற அனுபவங்களால் மட்டுமல்ல. பிறருடைய அனுபவங்களாலும் பாடம் கற்கும் பிராணி மனிதன் ஒருவனே!
-டெனிக்லான்

• ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது. ஆனால் ஒருவன் எப்போதும் மனிதனாயிருக்க முடியும்.
-கதே

• மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால் நீ உன் செவியை அடைத்துக் கொள்.
-குவார்லெஸ்

• எப்படிச் செய்வது என்பதை அறிந்தவனிடம் ஆற்றல் பாய்ந்து செல்கிறது.
-ஹப்பார்டு

• நாம் பொருளை இழந்தால் பொருளை மட்டுமே இழந்தவராவோம். தன்னம்பிக்கையை இழந்துவிட்டாலோ சகலத்தையும் இழந்தவராகி விடுவோம்.
-இமிட்ஸ்

• நெருக்கடியான நிலைமை ஏற்படும்போது அதை வெற்றிகரமாகச் சமாளிக்க ஒரே வழி...., நெருக்கடி இல்லாத, அன்றாட காரியங்களைத் திறம்படச் செய்யப் பழகிக் கொள்வதுதான்!
-யாரோ
தொகுப்பு: ராஜா ரஹ்மான், கம்பம்,  
இரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com