விடுகதைகள்

உடம்பைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கண்கள் கொண்டவன் தலையில் வைத்திருப்பதோ அழகிய கிரீடம்...
விடுகதைகள்

1. பெற்றோருக்கு வால் இல்லை, பிள்ளைக்கு மட்டும் வால்... 
2.நீ அவனைச் சுமக்கிறாய்... அதற்குப் பரிகாரமாக அவன் உன்னைச் சுமக்கிறான்...
3. இவனுக்குக் கால்கள் இல்லை, கைகளும் இல்லை... ஆனாலும் தாவித் தாவி வருவான்...
4. தானாகத் திறப்பான் தானாக மூடிக் கொள்வான் சத்தமில்லாமல்...
5. நான்கு கால்கள் இருந்தும் நடக்க முடியாத முடவன்...
6.பெட்டி நல்ல பெட்டி, வெண்மை நிறப் பெட்டி, பெட்டிக்குள்ளே வெள்ளியும் தங்கமும்...
7.உடம்பைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கண்கள் கொண்டவன் தலையில் வைத்திருப்பதோ அழகிய கிரீடம்...
8.இப்படிப்பட்ட நண்பர்களை எங்கும் பார்க்க முடியாது... ஒருவன் முன்னே சென்றால் மற்றவன் பின்னே செல்வான்...
9. இந்த இருபது பேரும் எப்போதும் தலையில் தொப்பியுடன் திரிவார்கள்...
விடைகள்:
1. தவளைக்குட்டி
2. செருப்பு
3. கடல் அலை
4. கண் இமை
5. நாற்காலி
6. முட்டை
7. அன்னாசிப்பழம்
8. கால்கள்
9. கை, கால் 
விரல்கள் (நகம் - தொப்பி)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com