தகவல்கள் 3

பிகாஸோவின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. நவீன ஓவியங்களாக இருந்ததால் அவற்றின் அடியில் விளக்கக் குறிப்புகளை எழுதி வைத்தார்
தகவல்கள் 3

புரியவில்லை!
பிகாஸோவின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. நவீன ஓவியங்களாக இருந்ததால் அவற்றின் அடியில் விளக்கக் குறிப்புகளை எழுதி வைத்தார் பிகாஸோ. ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே வந்த ஒரு பார்வையாளர் ஓர் ஓவியத்தைக் காட்டி "ஒன்றுமே புரியவில்லை...'' என்று பிகாஸோவிடம் சொன்னார்.  "அதற்குத்தான் ஓவியத்தின் அடியில் விளக்கக் குறிப்பு எழுதி வைத்திருக்கிறேனே!...'' என்றார் பிகாஸோ.  "அந்த விளக்கம்தான் புரியவில்லை'' என்றார் அந்தப் பார்வையாளர்!
அ.ராஜாரகுமான், கம்பம். 

பத்தாவது கிரகம்!
சொற்பொழிவாளர் சுகி.சிவத்திடம் ஒரு அன்பர்,  " நவக்கிரக தோஷத்தை எப்படி நீக்குவது?'' என்று கேட்டார். அதற்கு சுகி.சிவம், "ஒன்பது கிரகங்களைத்தவிர பத்தாவது கிரகம் ஒன்று இருக்கிறது....அதனால் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும்!''என்றார்.
"அதென்ன பத்தாவது கிரகம்?'' என்று கேட்டார் அன்பர்.
"அதுதான் இறையருளாலும், பெரியோர்களின் ஆசியாலும் கிடைக்கும் அநுக்"கிரகம்'' என்றார் சிரித்துக் கொண்டே!
இரெ.இராமமூர்த்தி, சிதம்பரம்.

அழகு!
"நீங்கள் இந்து மதத்தையே உயர்த்திச் சொல்கிறீர்கள்...., மற்றதெல்லாம் தாழ்வா?'' என்று கண்ணதாசனைப் பார்த்து ஒரு  அன்பர் கேட்டார்.     
"என் குழந்தை அழகு என்று நான் சொல்கிறேன்....அதற்காக மற்றவர்களின் குழந்தைகள்  அழகாக இல்லை....என்று சொன்னதாகப் பொருளாகுமா?....என் குழந்தை அழகு என்று நான் சொல்லக் கூடாதா?'' என்று கண்ணதாசன் சொன்னவுடன் அன்பர் புன்னகைத்தார். 
க.அருச்சுனன், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com