தகவல்கள் 3 

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் பார்ட்டீனுக்கு 1956 இல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!
தகவல்கள் 3 

மீண்டும் வருவேன்!
டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் பார்ட்டீனுக்கு 1956 இல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது! குடும்பத்துடன் வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளும்படி அழைப்பும் அனுப்பப்பட்டது! ஒரு மகனை மட்டும் அழைத்துவந்தார் ஜான் பார்ட்டீன். சுவீடன் நாட்டு மன்னர், ""குடும்பத்தோடு வரவில்லையா?'' என்று கேட்டார். 
"அடுத்த முறை பரிசு வாங்க வரும்போது நிச்சயம் அழைத்து வருகிறேன்'' என்றார் ஜான் பார்ட்டீன்! 
"சரிதான்!....நோபல் பரிசு ஒருமுறை வாங்குவதே பெரிய சாதனை!....இவர் மீண்டும் வாங்க வருவேன் என்கிறாரே?...''என்று மன்னரும் மற்றவர்களும் வியந்தனர். 
16 ஆண்டுகள் ஆகியது! 1972 இல் மின்கடத்திகளைப் பற்றிய சில உண்மைகளைக் கண்டுபிடித்தற்காக ஜான் பார்ட்டீனுக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது! குடும்பத்தோடு வந்து அதைப் பெற்றுக்கொண்டார் ஜான் பார்ட்டீன்!
என்ன உறுதி! என்ன நம்பிக்கை!
அ.கருப்பையா, பொன்னமராவதி.

வியந்த பாட்டு!
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒருமுறை ஐ,நா, சபையில் ஒரு தமிழ்ப் பாடலைச் சொல்லி அதற்கு லத்தீன் மொழிபெயர்ப்பையும் சொன்னாராம். அதனைக் கேட்ட மாநாட்டுத் தலைவர்கள் அசந்து போயினராம்! பலர் அந்தப் பாட்டை அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டனராம்! அந்தப் பாட்டு "யாதும் ஊரே யாவரும் கேளிர்...'' என்பதுதான்!
உ.ராமலிங்க அடிகளார், சிட்லபாக்கம்.

கூப்பிடு தூரம்!
ஒரு மன்னன் இடைக்காட்டுச் சித்தரிடம் வேடிக்கையாக, "ஆண்டவன் எங்கிருக்கிறார்?'' எனக் கேட்டான். 
இடைக்காட்டுச் சித்தர் சிரித்துக்கொண்டே, "கூப்பிடுதூரத்தில்தான்!'' என்றார். "எப்படி?'' என்று மன்னன் கேட்க, "முதலையிடம் மாட்டிக்கொண்ட யானை ஆதிமூலமே!...என்று கத்தியபோது ஓடி வந்து காப்பாற்றினார்!...அப்படியென்றால் ஆண்டவன் கூப்பிடுதூரத்தில்தானே இருக்க வேண்டும்?'' என்று இடைக்காட்டுச் சித்தர் கூறியதும் உண்மையை உணர்ந்தான் அரசன்!
வெ.சென்னப்பன், கீரைப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com