முத்துக் கதை: கவலை!

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதைக் கண்டு மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கின. ஆனால் சிங்கத்திற்கு சேவல் கூவும் குரல் கேட்டால் நடுக்கமும் எரிச்சலும் உண்டாகும்! 
முத்துக் கதை: கவலை!

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதைக் கண்டு மற்ற விலங்குகள் அஞ்சி நடுங்கின. ஆனால் சிங்கத்திற்கு சேவல் கூவும் குரல் கேட்டால் நடுக்கமும் எரிச்சலும் உண்டாகும்!
"ம்...எனக்கு எவ்வளவு பலம் இருந்தாலும் நிம்மதியே இல்லையே!....இந்தச் சேவல் கூவும் சப்தம் என்னை நடுநடுங்க வைக்கிறதே!....எத்தனை நாட்களுக்கு இப்படி பயந்து கொண்டு வாழ்வது?'' என்று தனக்குத் தானே புலம்பிக்கொண்டிருந்தது. 
அப்போது அந்த வழியாக யானை ஒன்று கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்தது. யானையைக் கண்ட சிங்கம், ""யானையாரே!.....உங்களை எதிர்க்கும் விலங்கு இந்தக் காட்டில் யார் இருக்கிறார்கள்?...உங்கள் உருவத்தைக் கண்டாலே மற்ற விலங்குகள் அஞ்சி ஓடுமே!.....நீங்கள் எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்?....என்ன காரணம்?'' என்று கேட்டது. 
அதற்கு யானை, ""சிங்கமே!.....நீ என்னை அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்!....இதோ, என் காதுகள் அருகில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா?....இவை என் காதுக்குள் போய்க் கொட்டிவிட்டால் என் உயிர் போவது போல் வலிக்கும்!....அதுக்காகத்தான் என் காதுகளை அசைத்துக் கொண்டே இருக்கிறேன்!.... பெயருக்குத்தான் எனக்குப் பெரிய உருவம்!...... ஆனால் நான் இந்தச் சிறிய குளவிக்கு அஞ்சித்தான் வாழ வேண்டியிருக்கிறது!...'' என்று சொன்னது யானை!
யானை சொன்னதைக் கேட்ட சிங்கம், "ஓ!....இந்த உலகில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதோ ஒரு கவலையும், அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. எனக்குக் கிடைத்த எத்தனையோ இன்பங்களை மறந்து விட்டு சிறிய ஒரு விஷயத்தை நினைத்து, நான் கவலைப் பட்டுக்கொண்டிருப்பதில் என்ன லாபம்?...'' என்று புரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழத்தொடங்கியது!
நீதி: தேவையில்லாத பயமே கவலைகளுக்குக் காரணம்!
-ஆர். மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com