அங்கிள் ஆன்டெனா

தேனீக்களுக்கும் ஈக்களுக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: தேனீக்களுக்கும் ஈக்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: இரண்டிற்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை, இரண்டு உயிரினங்களும் கணுக்காலிகள் என்பதுதான். மற்றபடி எல்லாமே வித்தியாசம்தான். 
தேனீக்கள் நம் நாட்டில் மட்டும் ஏறக்குறைய 15 லட்சம் பேர்களுக்கு, தேன் தொழிலில் வேலை வாய்ப்பைத் தருகின்றன.
மேலும் மனிதர்களைத் தேடி வந்து துன்புறுத்துவதில்லை. ஈக்களைப் போல அசுத்தங்களில் உட்கார்ந்துவிட்டு வந்து, நமது வீட்டு டைனிங் டேபிளுக்கும் விசிட்
அடிப்பது இல்லை.
பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக விளங்கும் தேனை வழங்குகின்ற தேனீக்கள் எந்தவிதமான நோய்களையும் பரப்புவதில்லை. ஆனால் ஈக்கள்
அப்படியில்லை. வீட்டு ஈ என்று பெயர் வைத்துக்கொண்டு நமக்குப் பலவிதமான நோய்கள் வருவதற்குக் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன.
தேனீக்கள் மட்டும் கொட்டுகின்றனவே என்று நீங்கள் ஈக்களுக்கு வக்காலத்து வாங்கலாம். கொட்டும் ஈக்கள் கூட உலகில் இருக்கின்றன தெரியுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com