ஞானக்கிளி! - 13: பூவாக மணக்கும்!

ஞானம் மரக்கிளையில் அமர்ந்தது. மாந்தோப்பைச் சுற்றிப் பார்க்க ஆசை வந்தது. அருகில் நின்ற பாபுவின் தோளில் அமர்ந்தது. 
ஞானக்கிளி! - 13: பூவாக மணக்கும்!

ஞானம் மரக்கிளையில் அமர்ந்தது. மாந்தோப்பைச் சுற்றிப் பார்க்க ஆசை வந்தது. அருகில் நின்ற பாபுவின் தோளில் அமர்ந்தது. 
அவன் மெதுவாக தோப்பைச் சுற்றி வந்தான். மாமரங்களோடு பூவரசு, வேம்பு, மகிழமரங்களும் இருந்தன. 
இடம் தூய்மையாக இருந்தது. கீழே விழுந்த இலைகளும் சருகுகளும் மூலையில் ஒரு குழியில் சேர்ந்திருந்தன. பின்னர் அவை இயற்கை உரம் ஆகும். 
தூய்மைக்கு யார் காரணம்? 
""சிவகாமி அக்காதான் தலைவர். நாங்க அவங்க சொன்னபடி ஒற்றுமையா இந்த வேலையைச் செஞ்சோம். ...''
பாத்திமா நடந்ததைச் சொன்னாள். 
""நம்ம கூட்டம் நடக்கிற இடத்திலே புதுசா பூச்செடிகளும் வெச்சிருக்கோம்!...''
""நல்ல தலைவர்!...பணிவோடு பணி செய்யும் தொண்டர்கள்!...''   
ஞானம் வாழ்த்தியது. மீண்டும் கிளைக்கு வந்தது. பாபு விரலை உயர்த்தினான். 
""அக்கா, என் வகுப்பு நண்பன் பீட்டரைப் பற்றிச் சொல்ல விரும்பறேன்...''
""இந்த பீட்டரா?''
""அவன் ஜான் பீட்டர்....அவன் பத்து நாளா 
பள்ளிக்கூடம் வரலே...அப்புறம் அவனோட அப்பா வந்தார்.  "அவனுக்கு கடுமையான காய்ச்சல்...இப்போ மருத்துவ மனையிலே இருக்கிறான்...' என்றார்..''.....
.....""பீட்டர் ஒரு நாள் வரலேன்னாலும் பள்ளிக்கூடமே அவனைத் தேடும்!....காரணம் அவன் பள்ளிப் பேரவையில் ஒரு கரும்பலகையில் தினம் மணிமணியான பொன்மொழிகளை அழகாக எழுதி 
வைப்பான்...''
"பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு....அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவுக்குக் கல்வியறிவைப் புகட்டு' ---  இவை போன்ற விவேகானந்தரின் மொழிகள்..., நபிகள் நாயகம்.., இயேசு..., புத்தர்..., காந்தி... போன்றோர் மணிமொழிகள் அவனால் மாணவர், ஆசிரியர் பார்வைக்கு வரும்...
சிந்தனையைத் தூண்டும்!....
....பீட்டரைப் பார்க்க வகுப்பு மாணவர்கள் 
பூங்கொத்தோடு பழங்கள், பிஸ்கெட், சத்துமாவுப் பொட்டலம்......
.....படுக்கையிலிருந்த பீட்டர் அவர்களைக் 
கண்டதும் எழுந்தான்...''
---பாபுவையே பிள்ளைகள் கூர்ந்து கவனித்தார்கள்...ஞானமும் அக்கறையுடன் கேட்டது.  ---
பீட்டரின் தலை மொட்டையாக இருந்தது. நோய்க்குச் சிகிச்சை செய்ய தலையை மொட்டையடித்தோம் எனப் பெற்றோர் கூறினர். 
மாணவர்களின் கண்கள் கலங்கின. 
""கவலைப்படாதீங்க....இன்னும் ஒரு வாரத்திலே பள்ளிக்கு வருவான்...''
பெற்றோர் சொன்னபடியே பள்ளிக்கு வந்தான். பேரவை அருகே பொன்மொழிப் பலகையைப் பார்த்தான்...."நம்பிக்கை மலைகளையும் நகர்த்தும்-பைபிள்' என்ற பொன்மொழி இருந்தது. அது அவனுக்
காகவே எழுதப்பட்டதாகத் தெரிந்தது. 
வகுப்புக்கு வந்தான். அவன் கண்களையே 
அவனால் நம்ப முடியவில்லை. வகுப்பிலிருந்த 
முப்பது பேரும் மொட்டைத் தலையோடு இருந்தார்கள்! 
""பீட்டர்....நீ மட்டும் மொட்டைத் தலையோடு இருந்தா....உன்னை யாராவது கிண்டல் செய்வாங்க....
நோயிலிருந்து மீண்ட நீ மறுபடி வார்த்தையாலே துன்பம் அடையக் கூடாது...உன் முகம் வாடக்கூடாது....அதனால்தான் நாங்க இந்த முடிவை 
எடுத்தோம்....''
 பீட்டரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்....
சொல்லும்போதே பாபுவின் கண்களும் கலங்கி
விட்டன. பிள்ளைகளின் இதயங்கள் நெகிழ்ந்தன. 
""எப்படிப்பட்ட பிள்ளைகள்!....இதுதான் அன்பு....
மனித நேயம்....இரக்கம் எல்லாம்!....இப்படி இருந்தால் நட்பு பூவாக மணக்கும்....பொன்னாக மின்னும்...''
ஞானம் அந்த நட்பு உள்ளங்களை வாழ்த்தியது. 
கிளி வரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com