தாய்ப்பாசம்!: ஞானக்கிளி! - 14ய்  பூதலூர் முத்து

ஞானம் வரும்போதே ஒரு கேள்வியோடு வந்தது. 
தாய்ப்பாசம்!: ஞானக்கிளி! - 14ய்  பூதலூர் முத்து


ஞானம் வரும்போதே ஒரு கேள்வியோடு வந்தது. 
""தங்கமணி ஐயா ரெண்டு நாளா சரியாத் தூங்கவே இல்லை....அதுக்கு யார் காரணம் தெரியுமா?''
""ஏன்?...அவரிடம் கொசு வலை இல்லையா?'' என்று கேட்டான் பாபு.
எல்லோரும் சிரித்தார்கள்.
""பாபு கேட்டது நல்ல கேள்வி....இது சிரிக்க மட்டுமல்ல....சிந்திக்க வைக்கும் கேள்வியும் கூட!...''
""அக்கா, நீதான் ஞானக்கிளியாச்சே!....சிறு  கல்லும் உன் கற்பனையைத் தூண்டும்!...ஒரு புல்லும் சிந்திக்க வைக்கும்!...''
""ஒரு புல்லைக்கூட நீங்க பூதத்தைப் போலப் பார்க்கறீங்களே!....தங்கமணி ஐயாவோ, நானோ கலலைப்படாமல் என்ன செய்யறது?''
சிவகாமி புரிந்து கொண்டாள்.
""தேர்வை எழுதிவிட்டு முடிவு என்னாகுமோன்னு கவலை....முடிவு வந்ததும் தோல்வி என்றால் வாழவே பிடிக்க
வில்லைங்கற தாழ்வு மனப்பான்மை....அச்சம்....விரக்தி....வேண்டாத முடிவுகளை எடுப்பது...''
ஒரு புறம் கவலையாக இருந்தாலும் விஷயத்தை அவள் புரிந்து கொண்டதில் ஞானத்திற்கு ஆறுதலாக இருந்தது. 
""கொசுத் தொல்லையா...., கொசு வலை போடறோம்...டெங்குவா...உடனே மருத்துவம் பார்த்துக்கறோம்...தேர்வு முடிவு...அதுவும்,  "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...' என்று பாடிய பாரதியோட மண்ணில் பிறந்து!,...அதுதான் தங்கமணி ஐயாவோட வருத்தம்!  நாம என்ன துணிச்சலுக்குக் குறைஞ்சவங்களா?...மாற்று வழி தெரியாதவங்களா?'' 
பாத்திமா உணர்வு பொங்க எழுந்தாள்.
""இல்லே....ஒரு பெண், புலியை முறத்தாலேயே அடிச்சு விரட்டினாள்னு படித்தோம்...நம்பவே இல்லை...சமீபத்தில் ஒரு செய்தி,...ஒரு பெண் விறகு ஒடிக்க காட்டுக்குப் போனா...ஒரு புலி வந்தது!...அவளோட குழந்தையின் கழுத்தைக் கவ்வி இழுத்துப் போனது!...அவளுடைய நெஞ்சு துடிச்சுப் பதறியது!....ஒரு விறகுக் கட்டையோடு ஓடினாள்!...புலியின் தலையில் ஓங்கி அடித்தாள்!....குழந்தையைப் போட்டுவிட்டு அது ஓடியது... எங்கிருந்துதான் அவளுக்கு அந்தத் துணிச்சல் வந்ததோ 
தெரியலே...எல்லாம் குழந்தை மீது இருந்த பாசம்!...''
ஞானம் அவளது தோளுக்குத் தாவியது. 
""பாத்திமா சொன்னதிலே நம் எல்லோருக்கும் ஒரு அருமையான செய்தி இருக்கு!...''
""என்ன செய்தி?''
""அந்த ஏழைத்தாயின் வற்றாத பாசத்தைப் போல நீங்க உங்களோட உயிரின் மீதும், உடம்பின் மீதும் மிகுந்த அன்பும், பாசமும் வைக்கணும்!....இந்தத் தேர்வுகள் மட்டுமல்ல.... இன்னும் வாழ்க்கையிலே எத்தனையோ கஷ்டங்கள்.... நெருக்கடிகள் வரலாம்...அப்போதெல்லாம் இந்தத் தாயின் மனவலிமை உங்களுக்கு வேணும்!....
உங்களை நீங்க காத்துக்கணும்...
18-08-2018 10:00வாழ்வு என்பது ..."சமூகத்திற்கான தன் பங்களிப்பு'  என்ற தீவிர நோக்கம் கொண்டது! அதில், தோல்வியால் துவண்டுவிடும் மனப்பான்மையோ, சோர்வடையும் மனப்பான்மையோ கூடவே கூடாது! உங்கள் பங்கை இயன்றவரை சமூகத்திற்கு அளிக்க உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்! நிச்சயம் வாழ்வில் வெற்றி காண்பீர்கள்!
தொடரும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com