கடி

"பூமி லட்டு மாதிரி ஒரு கோளம்!...எளிதில் புரிஞ்சுக்க இது ஒரு நல்ல உதாரணம்!''"பூந்தி லட்டா?...ரவா லட்டா சார்?'' 
கடி

* "பூமி லட்டு மாதிரி ஒரு கோளம்!...எளிதில் புரிஞ்சுக்க இது ஒரு நல்ல உதாரணம்!''
"பூந்தி லட்டா?...ரவா லட்டா சார்?''
ஆர்.யோகமித்ரா, 
எஃப் 2, கிருஷ்ணா அபார்ட்மென்ட், பிளாட்-20, சுந்தர் அவின்யூ, 
மகாசக்தி காலனி, செம்பாக்கம், சென்னை-600073.

* "பல் ஒரே கறையா இருக்கு டாக்டர்!''
"ஒரு பேஸ்டு தரேன்....போடுங்க....சுத்தமா ஆயிடும்!''
"அப்புறம்?''
""வேறே வந்து வாங்கிட்டுப் போங்க...''
கே.அனுசூயா, சென்னை-600019.

* "விரலை விட்டு எண்ணினப்புறமும் அஞ்சை நாலுன்னு சொல்றியே?''
"ஒரு "விரலை விட்டு'ட்டேன்!''
ஏ.நாகராஜன், 
5, வீரராகவன் தெரு, அண்ணா நகர், 
பம்மல், சென்னை-600075.

* "உலகம் உருண்டைன்னு எதனாலே சொல்றோம்?''
"வாயாலதான் சார் சொல்றோம்!''
சி.சடையப்பன், திண்டுக்கல்.

* "..."அறம்' என்றால் என்ன?''
"நயன்தாரா நடித்து "ஓஹோ' ன்னு ஓடின படம் சார்!''
ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி. 

* "எதுக்குடா தாத்தா தூக்க மாத்திரையோட ஒரு சின்ன மாத்திரையும் போட்டுக்கறார்?''
"கொட்டாவி விடறதுக்காக இருக்கும்!''
டி.மோகன்தாஸ், 
நாகர்கோவில்.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com