முத்துக் கதை: பழைய சோறு!

தரும காரியங்களோ, நற்செயல்களுக்கு உதவி செய்தோ அறியாத ஒரு கனவான் இருந்தார்.
முத்துக் கதை: பழைய சோறு!

தரும காரியங்களோ, நற்செயல்களுக்கு உதவி செய்தோ அறியாத ஒரு கனவான் இருந்தார். ஒரு நாள் அவர் தன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சூடான அறுசுவையுடன் கூடிய உணவு அது! அவரது மருமகள் அவருக்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் வாசலில் பசியுடன் ஒருவர், "தாயே ஏதேனும் சாப்பிடக் கொடுங்கள்!'' என்று சத்தமிட்டுக் கேட்டார். இதைக் காதில் வாங்கிய மருமகள் வாசலுக்குச் சென்று சத்தமாக தன் மாமனாரின் காதில் விழும்படி, "என் மாமனாரே பழையதைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்!....ஆகவே நீங்கள் வேறு வீடு சென்று கேளுங்கள்!'' என்றாள் மருமகள்.
 ஆனால் மாமனாருக்கு கோபம் வந்துவிட்டது! "நான் புதிதாக செய்த சுடுசோறு சுவையுடன் சாப்பிடும்பொழுது பழையதைத்தான் சாப்பிடுகிறேன் என்று பொய் சொல்லி நீ எப்படி என்னை அவமானப்படுத்துவாய்?....ஆகவே இப்பொழுதே இந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேறு!'' என்று சீறினார்!
 ""மாமா!....கோபப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள்!...சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு நான் வீட்டை விட்டுச் செல்கிறேன்!.....மனிதர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தினால்தான் பொருள், செல்வம் கிடைக்கிறது!.....இப்போது உங்களிடம் உள்ள பொருள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் கிடைத்தவை. இந்தப் பிறவியில் ஒரு புண்ணியமும், ஒரு நல்ல காரியமும் நீங்கள் செய்யவில்லை....அதனால்தான் நீங்கள் சாப்பிடுவதை பழையது என்று சொன்னேன். இப்போது சொல்லுங்கள்!....நான் சொன்னது தவறு என்றால் நான் இப்பொழுதே இந்த வீட்டை விட்டுப் பிறந்த வீடு செல்கிறேன்'' என்றாள் மருமகள்.
 "மகளே!....நீதான் என் கண்ணைத் திறந்தாய்!....நீ சொன்னது நூற்றுக்கு நூறு சரியே!....இனி நான் தான தருமங்கள் செய்து மறுபிறவிக்கு செல்வம் சேர்ப்பேன்!'' என்றார் கனவான்.
 
 தீபம். எஸ்.திருமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com