தந்திரத்தின் பலன்!

ஒரு வியாபாரி உப்பு மூட்டையை வாங்கினான். அதைத் தன் கழுதையின் மீது ஏற்றி வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு ஓடை. அதில் கழுதை இறங்கியது.
தந்திரத்தின் பலன்!

ஒரு வியாபாரி உப்பு மூட்டையை வாங்கினான். அதைத் தன் கழுதையின் மீது ஏற்றி வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு ஓடை. அதில் கழுதை இறங்கியது. அப்போது கழுதையின் கால் தடுமாறி ஒடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனது. கழுதை எழுந்தபோது உப்பு மூட்டையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. தண்ணீரில் விழுந்த உப்பு கரைந்ததால்தான் எடை குறைந்தது என்பதை கழுதை அறிந்து கொண்டது. 
மற்றொரு நாள் இதே போன்று உப்பு மூட்டையை கழுதை மீது ஏற்றினான் வியாபாரி. அதை ஏற்றிக்கொண்டு வியாபாரியுடன் திரும்பியது. வழக்கம்போல் ஓடை எதிர்பட்டது. ஓடையில் இறங்கிய கழுதை வேண்மென்றே தண்ணீரில் விழுந்தது. உப்பும் தண்ணீரில் கரைந்தது. கழுதையின் பாரம் வெகுவாகக் குறைந்தது. 
வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. இம்முறை உப்புக்கு பதிலாக கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். அதை கழுதையின் மீது ஏற்றினான். வியாபாரி கழுதையின் முதுகில் சுமையை ஏற்றினான். ஊர் திரும்பும் பாதையில் ஓடையைக் கண்ட கழுதைக்கு குஷி! கடகடவென்று நடந்து வேண்டுமென்றே ஓடையில் விழுந்தது. ஆனால் கடற்பஞ்சு கரையவில்லை! மாறாக, கடல்நுரை ஏராளமான தண்ணீரை உறிஞ்சிக் கொண்டது. கழுதைக்கு சுமை மிகவும் கனமாகிவிட்டது. 
தான் செய்த தந்திரம் தனக்கே இடைஞ்சலாகிவிட்டது கண்டு நொந்துகொண்டது கழுதை. 
நீதி: உழைப்பிலிருந்து பின் வாங்க நினைத்தல் சரியல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com