முத்துக் கதை: உழைப்பின் ஆனந்தம்!

முத்துக் கதை: உழைப்பின் ஆனந்தம்!

ஒரு ஜமீன்தார் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு ஏதோ ஒரு வேலையாக குதிரை வண்டியில் ஏறிச் சென்றார்.

ஒரு ஜமீன்தார் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு ஏதோ ஒரு வேலையாக குதிரை வண்டியில் ஏறிச் சென்றார். திரும்பி வரும்போது வண்டியின் சக்கரம் ஒன்று பழுதாகி விட்டது. பக்கத்திலிருந்த கருமானிடம் சென்றார். வண்டியை பழுது பார்த்துத் தரும்படி சொன்னார். 
அது பொழுது சாய்ந்த வேளை. கருமானின் உதவி ஆட்கள் வீடு திரும்பிவிட்டனர். கருமானுக்கு துருத்தி போட உதவிக்கு ஆள் இல்லை. ""துருத்தி போட ஒரு ஆள் இருந்தால் பழுது பார்க்க முடியும்'' என்றார் கருமான். 
அவசரமாக வீடு திரும்ப வேண்டியிருந்ததால் வேறு வழியில்லாமல் தானே துருத்தி போடுவதாகச் சொன்னார் ஜமீன்தார். 
உடனை கருமான் வேலையைத் தொடங்கினான். ஜமீன்தார் துருத்தி போட ஆரம்பித்தார். 
ஜமீந்தாருக்கு இதற்கு முன் உழைத்துப் பழக்கம் இல்லாததால் உடலிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. வலது கை வலித்தால் இடது கையாலும், இடது கை வலித்தால் வலது கையாலும் மாற்றி மாற்றி துருத்தி போட்டார். இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு ஆனந்தம் ஏற்பட்டது. உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது. மேல் துண்டால் அடிக்கடி உடலையும், முகத்தையும் துடைத்துக் கொண்டார்!
சக்கரம் பழுது பார்க்கப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டது. 
ஜமீன்தார் கருமானிடம், ""நான் உனக்கு எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும்?'' என்று கேட்டார். 
""வழக்கமாக நான் இதற்கு ஆறு வெள்ளிக் காசுகள் வாங்குவேன்....நீங்க துருத்தி போட்டதால் நான்கு வெள்ளிக் காசுகள் கொடுங்க....போதும்!'' என்றார் கருமான்.
ஜமீன்தார் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஆறு பொற்காசுகளை எடுத்து அவனிடம் நீட்டினார். 
"" நான் வெள்ளிக்காசுகள்தானே கேட்டேன்!.....நீங்க பொற்காசுகள் ததருகிறீர்களே?....''
ஜமீன்தார் கருமானை நோக்கிக் கை கூப்பி, ""இது உன்னுடைய கூலி அல்ல!....நான் உனக்குக் கொடுக்கும் குருதட்சிணை!....உடல் உழைப்பில் இத்தனை ஆனந்தம் இருக்கிறதென்று நீதான் எனக்கு முதன்முறையாகச் சொல்லிக் கொடுத்தாய்!....இனி உழைப்பதற்காக சில மணி நேரங்களாவது நான் தினமும் செலவிடுவேன்!'' என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com